கோவையில் பயங்கரவாத இயக்க பயிற்சி மையம் – என்.ஐ.ஏ., அதிர்ச்சி தகவல்

‘சர்வதேச பயங்கரவாத இயக்கமான, ஐ.எஸ்.,க்கு ஆள் திரட்டும், ரகசிய பயிற்சி மையம், கோவையில் இயங்கியது’ என்ற அதிர்ச்சி தகவலை, என்.ஐ.ஏ., தெரிவித்து உள்ளது.

கோவையில், 1998, பிப்., 14ல், பா.ஜ., மூத்த தலைவர் அத்வானி வருகையின்போது, அவரை குறி வைத்து, ‘அல் – உம்மா’ பயங்கரவாதிகளால் நிகழ்த்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்பில், 58 பேர் உயிரிழந்தனர்; 250 பேர் காயமடைந்தனர். ‘அல் – உம்மா’இத்தாக்குதலை நடத்திய, ‘அல் – உம்மா’ பயங்கரவாத இயக்கம், தமிழக அரசால், அப்போதே தடை செய்யப்பட்டது.அதன் நிறுவனர் பாஷா, பொதுச் செயலர் முகமது அன்சாரி உள்ளிட்ட முக்கிய நபர்கள், குண்டுவெடிப்பு வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, கோவை மத்திய சிறையில் உள்ளனர்.

கோவையில் அமைதியை நீடிக்கச் செய்யும் பொருட்டு, மத ரீதியான அடிப்படைவாத அமைப்புகள், போலீசாரின் தொடர் கண்காணிப்பில் உள்ளன.கடந்த, ஏப்., 21ல், ஈஸ்டர் தினத்தன்று, இலங்கையில் நடந்த பயங்கர குண்டுவெடிப்புகளில், 290 பேர் கொல்லப்பட்டனர். சர்வதேச அளவிலான, ‘நெட்வொர்க்’குடன், உள்ளூர், ‘ஜிகாதி’கள் இத்தாக்குதலை நடத்தியது அம்பலமானது.இதையடுத்து, தமிழகத்தில் கோவை, தஞ்சாவூர், திருச்சி, சிவகங்கை, நாகை உள்ளிட்ட, 10 இடங்களில், தேசிய புலனாய்வு முகமை எனப்படும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

கோவையில் பல்வேறு இடங்களில் நடந்த சோதனையில், சர்வதேச பயங்கரவாத இயக்கமான, ஐ.எஸ்., ஆதரவு பிரசார மின்னணு ஆவண ஆதாரங்கள் சிக்கின. இருவர் கைது’லேப் டாப், பென் டிரைவ், சிம்கார்டுகள்’ பறிமுதல் செய்யப்பட்டன. ஐ.எஸ்., ஆதரவாளர்களான கோவையைச் சேர்ந்த முகமது அசாருதீன் மற்றும் ஹிதாயதுல்லா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்நிலையில், கோவை இளைஞர்கள் தொடர்பான வழக்கில், சமீபத்தில் கோர்ட்டில், என்.ஐ.ஏ.,வால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. அதில், ஐ.எஸ்.,சின் பயங்கரவாத பழிவாங்கல் கொள்கையை, இளைஞர்கள் மத்தியில் பரப்பி, அந்த அமைப்பிற்கு ஆள் திரட்டும் ரகசிய பயிற்சி வகுப்புகள், கோவையில் இயங்கி வந்துள்ளன. யார், யாரெல்லாம் பங்கேற்றனர் என்ற விபரங்கள், என்.ஐ.ஏ., அதிகாரிகளால் சேகரிக்கப்பட்டுள்ளன.

ரகசிய பயிற்சி மையங்களில் தயார்படுத்தப்படும் இளைஞர்களை, மூளைச்சலவை செய்து, கேரள ஏஜன்ட்கள் உதவியுடன், ‘வெளிநாட்டு வேலை’ என்ற போர்வையில், ஐ.எஸ்.,க்கு ஆதரவாக போரிட, சிரியா போன்ற நாடுகளுக்கு அனுப்பும் திட்டமும் இருந்துள்ளது.இவ்விபரங்கள், கோர்ட்டில், என்.ஐ.ஏ., தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தில், சந்தேக நபர்கள், தொடர் கண்காணிப்பில் உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார்.