கோடைகாலத்தில் உடலுக்கு குளிர்ச்சி தரும் பழங்கள்

தர்பூசணி

நீரிழிவு நோய், இதய நோய், ரத்தக் கொதிப்பு உள்ளவர்கள், உடல் பருமனாக உள்ளவர்கள் இந்த பழத்தை தாராளமாக சாப்பிடலாம். இந்த பழத்தில் இரும்பு சத்து அதிகமாக உள்ளது. தர்பூசணி பழச்சாறுடன் இளநீர் கலந்து அருந்த வெயிலால் ஏற்படும் வெம்மை குறையும். உடல் சூடு தணியும். தர்பூசணிப் பழத்துண்டுகளை பதநீரில் போட்டு, ஒரு துண்டு பனிக்கட்டி சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி உடல் குளிர்ச்சி ஏற்படும். வயிற்று வலி தீரும்.

பப்பாளி

பலமான விருந்துகளுக்குப் பிறகு பப்பாளிப்பழத் துண்டுகள் ஐந்தாறு சாப்பிட்டால் போதும். உடனே சாப்பிட்டவை அனைத்தும் ஜீரணமாகிவிடும். வயிற்றில் புழு, பூச்சிகளால் அவதிப்படுபவர்களுக்கும், ஜீரண சக்தி கோளாறு உள்ளவர்களுக்கும் பப்பாளியில் உள்ள ‘பாப்பைன்’ என்னும் செரிமானப் பொருள் சர்வசக்தி வாந்த மருந்தாகப் பயன்படுகிறது. வாரம் ஒருமுறை பப்பாளிப் பழம் சாப்பிடுவது கண்களுக்கு மிகவும் நல்லது.