அஞ்சலி அசோகமித்திரன்

பெயர் புகழ் உண்டு, சமரஸம் இல்லை

கடந்த வியாழக்கிழமை (மார்ச் 23) ஒரு நண்பர் அசோகமித்திரன் மறைந்துவிட்டார்” என்று இரண்டு வார்த்தை குறுந்தகவல் அனுப்பியிருந்தார். எதிரெதிர் துருவங்களாக இருப்பவர்களைக் கூட அந்த மரணம் பாதித்திருந்ததை, நேரடியாகவும் சமூக வலைதளங்களிலும் தென்பட்ட அஞ்சலிகள் மூலம் அறியமுடிந்தது. ‘அசோகமித்திரன்’ 1966-ஆம் ஆண்டு முதல் முழுநேர எழுத்தாளரானார்.

பொருளாதார ரீதியில் அசோகமித்திரனுக்கு எழுத்துக்கள் உதவவில்லை. அவரது மனைவியின் சோற்ப வருமானத்திலும், கார் ஓட்டுநர் போன்ற பணிகளைச் செய்தும் தனது இலக்கியப் பணிகளைத் தொடர்ந்தார்.

தனது எழுத்துக்களில் மத நம்பிக்கையை வெளிப்படுத்தவில்லை என்றாலும் தனிப்பட்ட முறையில் ஆழ்ந்த மத நம்பிக்கைக் கொண்டவராக இருந்தார். அவர் மறைந்த பிறகு திருப்பூர் கிருஷ்ணன் வெளியிட்ட முகநூல் பதிவில் ‘தியானம் மட்டுமல்ல ஜபமும் முக்கியம்’ என்று அசோகமித்திரன் கூறியதை பதிவு செய்திருக்கிறார். அதேபோல் எழுத்தாளர் ஜெயமோகனுக்கு ஒருமுறை ஆஞ்சனேயரை துதியுங்கள் என்று அசோகமித்திரன் அறிவுறுத்தியிருக்கிறார். நடுநிலை என்ற பெயரில் தனது எழுத்துக்களில் அசோகமித்திரன் சமரசம் செது கொள்ளவில்லை. தான் பிறந்து வளர்ந்த ஹைதராபாத்தில் தேசப் பிரிவினை காலத்தில் ரஜாக்கர் வன்முறையில் பாதிக்கப்பட்ட மக்களின் அவலத்தை தனது கதையில் பதிவு செதார்.

அசோகமித்திரனுக்கும் ‘விஜயபாரத’த்துக்கும் பல ஆண்டுகளாக நட்பு உண்டு. அவரது ‘விடுதலை’ என்ற குறுநாவலுக்கும், ‘இன்று’ என்ற சிறுகதை தொகுப்புக்கும் மதிப்புரை வெளியிட்டுள்ளதையும், கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை விஜயபாரதம் தீபாவளி மலர்களில் அவரது சிறுகதைகளை தொடர்ந்து அளித்து வந்ததையும் நினைவு கூர்கிறோம்.