குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசியவாதிகள் இல்லை – இராம.கோபாலன்

குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்கள் தேசியவாதிகள் இல்லை என்றார் இந்து முன்னணி நிறுவன அமைப்பாளர் இராம.கோபாலன்.

 குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்ப்பவர்களும், போராட்டத்தைத் தூண்டிவிடுபவர்களும் தேசியவாதிகள் இல்லை. இந்த சட்டத்தை இந்து முன்னணி முழு மனதோடு வரவேற்கிறது. இந்தியாவின் ஒரு பகுதியாக இருந்த பாகிஸ்தான், வங்கதேசம் நாடுகளின் நிலப்பரப்பை மீட்க வேண்டும். இழந்த இந்து கோயில்களை மீட்க வேண்டும். இந்துக்களாக இருந்து இதர மதத்துக்குச் சென்ற அனைவரையும் தாய் மதமான இந்து மதத்துக்கு கொண்டு வரவேண்டும். பாரதத்தை இந்து நாடு என அறிவிக்க வைக்கவேண்டும். இந்திய நாடு என்னவானாலும் எப்போதும் இந்து நாடாகத்தான் இருக்கும். இதுவே இந்து முன்னணி இயக்கத்தின் லட்சியம். இதை நோக்கித் தொடர்ந்து பயணிப்போம் என்றார் அவர்.

 மாநாட்டில், நாட்டிலுள்ள 14 கோடி இஸ்லாமியர்களுக்கு இந்த சட்டத்தால் எவ்வித பாதிப்பும் இல்லை. இலங்கைத் தமிழர் பிரச்னைக்கும் சம்மந்தம் இல்லை என்பன உள்ளிட்ட 11 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இந்த மாநாட்டுக்கு, மாநிலத் தலைவர் காடேஸ்வரா சி.சுப்பிரமணியம் தலைமை வகித்தார். மாநில அமைப்பாளர் க.பக்தன், பொதுச்செயலாளர் நா.முருகானந்தம் மாநிலப் பொருளாளர் நா.சண்முகசுந்தரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.