குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேசும் தலைவர்களுக்கு சில கேள்விகள்.

குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெறிவித்து கண்ணீர் விடும் கருணையே உருவான தலைவர்களிடம் இரக்கமே உருவான ஜீவன்களிடம் சில கேள்விகள் கேட்க விரும்புகின்றேன்.

ஒரே நாட்டில் பிறந்து, ஒரே கலாச்சாரத்தில் வளர்‌ந்து ஒரே வரலாறு கொண்டவர்களாய் வாழும், ஒரு மக்கள் கூட்டத்தினரை பார்த்து ஆரியன் என்று வெறுப்பதும் இன்னொறு ஊட்டத்தை பார்த்து வடநாட்டான் என்று ஒதுக்குவதும் மற்றொரு கூட்டத்தை பார்த்து வந்தேரிகள் என்று விஷயம் கக்குவதும்! வசது மொழிகள் பேசுவதுமாக நேற்றுவரை இருந்த நீங்கள் இன்று நமது நாடில் பிறக்காத, நமக்கு உறவே தொடர்போ இல்லாத, சொல்லப்போனால் நம்மை எதிரிகளாய் பார்க்கும் நாடுகளிலிருந்து வரும் சட்டவிரோத குடியேறிகள் மீது அன்பு காட்டுவதும், அவர்களை இங்கே அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதும் எதற்காக? ஏன் இந்த நாடகம்? ஏன் இந்த நடிப்பு?

பஸ் பயணத்தில்கூட இருக்கை வசதி கிடைத்தவர்கள், தங்களை போன்ற கட்டணம் செலுத்தும் நின்றுகொண்டு பயணிக்கும் சக பிரயாணிகளை கருணை காட்டுவது இல்லை. வசதியை பகிர்ந்து கொள்வது

சுமார் 12 மணி நேர ரயில் பயணத்தில், முன்பதிவு செய்து பயணிக்கும், ரயில் பெட்டியில், காத்திருப்பது நிலையில் பயணிகளுக்கோ, அமர்வதும் கூட நாம் இடம் தருவது இல்லை. அவர்களை நாம் உரிமையில் தலையிட வந்த உபத்திரவ காரர்களாக பார்க்கின்றோம். பாதுகாப்பை நினைத்து பயம் கொள்கின்றோம்.

இவ்வளவு ஏன் நமது இரு சக்கர வாகனத்திலோ நான்கு சக்கர வாகனத்திலோ நாம் தனியாக செல்லும்போதும் நமக்கு அறிமுகம் இல்லாதவர்களை ஏற்றி கொள்ள விரும்புவது இல்லை, அதற்கு காரணம் நமது வசதி குறையும் என்பது மட்டுமல்ல; ஆபத்தை விலை கொடுத்து வாங்க வேண்டாம் என்கின்ற முன் எச்சரிக்கை எண்ணம்; சொந்த காசில் சூனியம் வைத்து கொள்ள வேண்டாம் என்கின்ற விழிப்புணர்வு!

சொந்த நாட்டு மக்களிடம் இல்லாத நம்பிக்கை நமக்கு சம்பந்தமே இல்லாத அந்நிய நாட்டு மக்கள்மீது நமக்கு வருவது ஏன்? நாம் ஏன் இப்படி ஆகிவிட்டோம். ஏன் இந்த சிந்தனை வறட்சி எங்கிருந்து வருகின்றது இந்த ஏமாளித்தனம்? யாரால் வருகின்றது இந்த முட்டாள்தன்.

இந்தியாவை நேசித்து வாழ்பவர்களோடு, மனிதனை மனிதனாக மதித்து வாழ்பவர்களோடு, நமது வரலாற்றை நமது கலாச்சாரத்தை நமது வாழ்க்கை முறையை ஏற்றுக்கொண்டு நம்மோடு சகோதர உணர்வுடன் வாழ்பவர்களோடு நாம் நட்பு பாராட்டவேண்டும். அவர்கள் எந்த ஜாதியாக இருந்தாலும் எந்த மதமாக இருந்தாலும் அவர்களோடு சேர்த்து வாழவேண்டும் என்னைவிட – என்‌ ஜாதியை என் மதத்தை விட, என் நாடு முக்கியம் என்பவரே தேசபக்தி கொண்டவர்களாக ஏற்றுக்கொள்ளப்படுவர். இதற்கு மாறாக, நாட்டைவிட என் ஜாதி முக்கியம், நாட்டைவிட என் மொழி முக்கியம், நாட்டை விட என் மதம் முக்கியம் என்று சொல்கின்றவர்கள் ஆபத்தானவர்கள். அவர்களிடம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும். சமயம் பார்த்து அவர்கள் நாட்டை ஆபத்தில் சிக்க வைத்து விடுவார்கள். இந்த நேரத்தில் இன்றைய தமிழக அமைச்சர் ஒருவர் சொன்ன கருத்து சத்தியமானது. இந்தியாவில் வாழ்பவர்கள் எல்லாம் இந்தியர்கள் அல்ல, யாருடைய இதயத்தில் இந்தியா வாழ்கின்றதோ அவர்களே உண்மையான இந்தியர்.

அனைவருக்கும் குடியுரிமை வேண்டும் என்று போராடுகின்ற எதிர்கட்சிகளின் கோரிக்கை அதிர்ச்சியளிக்கின்றது என்றால், குடியுரிமை கேட்டு போராடும், சில அமைப்புகளின் செயலும், சட்டவிரோத குடியேறிகள் நடத்தும் வன்முறை வெறியாட்டமும் பேரதிர்ச்சியை ஏற்படுத்துகின்றது.

கோரிக்கையை பரிசீலியுங்கள்’ என்று கருணை மனு போடவேண்டிய அவர்கள், பொதுமக்களின் அன்றாட பணிகள் தடைபடுமாறு சாலைகளை மறிப்பதும், அரசை மிரட்டுகின்ற வகையில் வன்முறையில் ஈடுபடுவதும், ரயிலை கொளுத்துவதும், பஸ்ஸை தாக்குவதையும், பொது சொத்துக்களை தீக்கிரையாக்குவதும், நமது நாட்டிற்கு எதிராக கோஷமிடுவதும், ராணுவத்திற்கு எதிராக பேசுவதும் அப்பப்பா பாரத நாட்டில் சிறுபாண்மையினருக்கு என்ன உரிமை இங்கு தரப்படவில்லை?