இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை கொடுக்க வேண்டுமா?

இலங்கை அகதிகள் பிரச்சினையை பொருத்தவரை அது வேறு பரிமாணம் கொண்டது. இலங்கை நமது நட்புநாடு; நமது கோரிக்கையை சொன்னால் அதை ஏற்று செயல்படுத்தும் நிலையில் உள்ள நாடு; இங்கே உள்ள தமிழ் அகதிகள் நமது நாட்டில் அகதிகளாக வாழ்வதை விட இலங்கைக்கு மீண்டும் சென்று அங்கே தங்கள் சொந்த இடங்களில் வாழவே விரும்புகிறார்கள். அவர்களின் அந்த விருப்பத்தை கொஞ்சம், கொஞ்சமாக, நாம் நிறைவேற்ற வேண்டும், அவர்களின் வசிப்பிடம், அவர்களின் வியாபாரம் அவர்களின் பாதுகாப்பு, போன்றவற்றை அந்த அரசோடு அமர்ந்து பேசி அதை உறுதி செய்து தரவேண்டும். அதை இன்றைய நமது அரசு செய்துகொண்டுதான் இருக்கிறது. இந்த அரசு வந்தபிறகு, இலங்கையில் இன கலவரம் இல்லை நமது நாடு அங்கே வீடுகளை கட்டி கொடுத்து தமிழர்கள் மத்தியில் புதிய நம்பிக்கையை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் இலங்கை தமிழர்கள் வாழ்ந்த பல பகுதிகளில், அவர்கள் பெரும்பான்மையினராகவே வாழ்ந்தார்கள். தங்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்துகொள்ளும் சக்தி படைத்தவர்களாகவே வாழ்ந்தார்கள். அதுமட்டுமல்ல தங்களின் உரிமை குரலை சர்வதேச அளவில் ஒலிக்க செய்யும் ஆற்றலும் அவர்களுக்கு இருந்தது!

அவர்களுக்கு தேவை பாரத நாட்டின் தார்மீக ஆதரவு ஒன்று மட்டும்தான். பிறகு ஏன் அவர்கள் வீழ்ந்தார்கள் என்ற கேள்வி எழலாம். அதற்கு சரியான பதில்! அன்று இருந்த மத்திய அரசு அந்த ஈழத்தமிழர்களின் அழிவை விரும்பியது! அன்று மாநிலத்தில் இருந்த அரசு மத்திய அரசில் பதிவுகளை மட்டுமே விரும்பியது. அதுதான் அவர்களின் வீழ்ச்சிக்கு காரணமாக அமைந்தது.

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடும் அரசியல் தலைவர்கள் விஷயமாக நாம் கவனிக்கவேண்டியது என்னவென்றால், இன்றைக்கு அகதிகளுக்காகவும் இலங்கை தமிழர்களுக்காகவும், இஸ்லாமியர்களுக்காகவும் குரல் எழுப்பும் எல்லோரும், நீண்டகாலம் அரசியலில் இருந்து வருகின்றவர்கள்தான், கடந்த பல ஆண்டுகளாக ஆட்சி அதிகாரத்தில் இருந்தவர்கள்தான், அவர்கள் விரும்பியிருந்தால் அவர்களுக்கான அனைத்து நன்மைகளையும் தங்கள் ஆட்சி காலத்திலேயே செய்து கொடுத்திருக்க முடியும். ஆட்சியில் இருந்தபோது சிறு துரும்பையும் கிள்ளி போடாத இவர்கள் இன்று தங்களின் அரசியல் லாபத்திற்கு வேஷம் போடுகின்றார்கள். ஆர்பாட்டம், போராட்டம் என்று வெற்று அரசியல் செய்கின்றார்கள்.

இந்த விஷயத்தில் இன்னொரு கோணமும் இருக்கின்றது. உண்மையில் இந்த தலைவர்களுக்கு நமது நாட்டிம் மீது அக்கரை இருந்தால் இந்த மசோதாவை முற்றாக எதிர்க்க வேண்டும். நமக்கும், நமது சந்ததியினருக்கும் மட்டுமே சொந்தமான நமது நாட்டில் மற்ற நாடுகளிலிருந்து வருகின்றவர்களுக்கு குடியுரிமை கொடுத்து நமது நாட்டிற்கு கூடுதல் சுமையை ஏற்படுத்த கூடாது. நமது வளங்களையும், வசதிகளையும், மேலும் பலரோடு பகிர்ந்து கொள்ளமுடியாது. என்ற நிலையை எடுத்திருக்கவேண்டும். நாமே இன்றும் முழுமையான வசதிகளையும் வளர்ச்சியையும் எட்டவில்லை. இந்த நிலையில் வேறு நாடுகளுலிருந்து வருகின்றவர்களுக்கு எனது உரிமைகளை பங்குபோட்டு தர இயலாது. என்று வாதாடி இருக்கவேண்டும். இந்த வாதம் சுயநலவாதமாக இருந்தாலும் அதில் ஞாயம் இருக்கின்றது. எனது நாட்டு மக்களின் வசதிதான் எனக்கு முக்கியம், என்று சொல்லியிருந்தால், அவர்களை பாராட்டியிருக்கலாம். அவர்களை நினைத்து பெருமை கொள்ளலாம் ஆனால் அந்த அரசியல் நடிகர்கள் என்ன சொல்கின்றார்கள். எல்லோருக்கும் குடியுரிமை கொடு, சட்டவிரோதமாக இங்கே ஊடுருவியர்களுக்கும் குடியுரிமை கொடு, எந்த நாட்டிலிருந்து யார் வந்தாலும் அந்த நாடுகளில் அவர்கள் எவ்வளவு வன்முறை செய்திருந்தாலும், அவர்கள் மீது கடுமையான வழக்குகள் இருந்தாலும் அவர்கள் அனைவருக்கும் எந்த கேள்வியும் கேட்காமல் குடியுரிமை கொடு. என்று கூச்சமே இல்லாமல் சொல்லுகின்றார்கள்.

அந்த சட்டவிரோத குடியேறிகளுக்கும் நமக்கும் எந்தவித கலாச்சார உறவும். வாழ்வியல் முறைகளில் ஒற்றுமையும் கிடையாது! அவர்கள் இங்கே அனுமதித்து இங்கேயுள்ள மக்களுடனான ஒற்றுமை இடைவெளியை குறைத்து, வேற்றுமை இடைவெளியை அதிகரிக்க தேவையில்லை, வேற்றுமையில் ஒற்றுமை நல்லதுதான் ஆனால் வேற்றுமையே இல்லாத ஒற்றுமை அதைவிட நல்லது. இந்த வேற்றுமையில் ஒற்றுமை கோஷம் நமக்கு செய்த நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். அதை நாம் 1000 ஆண்டு வரலாறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொள்ளவேண்டும்.

இதில் மக்கள்தான் விழிப்புடன் இருந்து அரசியல் வாதிகளின் நரித்தனத்தை புரிந்துகொள்ள வேண்டும் அகதிகள் பிரச்சனை மடுமல்ல. தீவிரவாதம், பயங்கரவாதம் சமூக பதட்டம், இவற்றில் எல்லாமும் முதலில் பாதிக்கப்படுவது சாதார மக்கள்தான். பாதுகாப்பாகவும், பணபலத்துடனும் வாழும் அரசியல் தலைவர்கள், இவற்றிலிருந்து தங்களை பாதுகாத்து கொள்கின்றார்கள். நேரத்திற்கு தகுந்த மாதிரி பேசி தங்களை காத்துக் கொள்கின்றார்கள்.

இந்த அரசியல் நடிகர்களின் வசன பேச்சில் மயங்கி இரக்கம், கருணை, மனிதநேயம், சமூகநீதி போன்ற வார்த்தை பிரயோகங்களில் உருகி அவர்களுக்கு துணையாக நின்றால், கஷ்டம் நமக்கு. நஷ்டம் நாட்டிற்கு என்றுதான் முடியும்.