அகதிகள் குடியிரிமை -சலுகையா?, உரிமையா?.

குடியுரிமை திருத்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டவுடன், மன்றத்திற்கு உள்ளே மட்டுமல்ல வெளியேயும் பெரும் புயலை கிளப்பியிருக்கின்ற வடகிழக்கு மாநிலங்கள், மேற்கு வங்கம், அசாம், டெல்லி, போன்ற மாநிலங்களில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் வன்முறையில் முடிந்திருக்கிறது. பல மாநிலங்களில் மசோதாவிற்கு எதிர்ப்பு என்ற பெயிரில் பாஜக எதிர்ப்பு போராட்டங்கள் அந்தந்த மாநில கட்சிகளால் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகத்திலும், திமுகவும் அதன் தோழமை கட்சிகளும் இந்த சட்டத்தை கடுமையாக எதிர்க்கின்றார்கள். சில அமைப்புகளின் தலைவர்கள், தமிழ் தேசிய ஆதரவாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் எதிர்க்கின்றார்கள்.

ஆதரிப்பவர்கள் என்று பார்த்தால் பாஜக தலைவர்கள், அதன் தோழமை கட்சிகள். ஆதரிக்கின்றார்கள். சில வலதுசாரி சிந்தனையாளர்கள் ஆதரிக்கின்றார்கள்.

இதன் சாதக, பாதக அம்சங்கள் புரியாமல் இந்த சட்டம் வந்தால், நமக்கு என்ன நன்மை? நாட்டிற்கு என்ன நன்மை? இந்த சட்டம் வராவிட்டால் யாருக்கு நன்மை? யாருக்கு தீமை? என்பது புரியாமல் வழக்கம்போல குழம்பிபோய் இருக்கின்றார்கள். பொதுமக்கள்!

எதிர்கட்சிகளின் வாதம், சத்தமாகவும் ஆக்ரோஷமாகவும், இரக்க உணர்வு தூண்டுகின்ற வகையிலும் இருப்பதினாலும் அவர்களுக்கு ஆதரவு நிலை எடுப்பதுதான் சரியான முடிவு என்று, நினைக்கின்றார்கள். பொதுமக்கள்.

இன்னொரு பக்கம் தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் வரும் செய்திகள்.. மக்களின் கடும் எதிர்ப்பு மக்கள் போராட்டம், மாணவர்கள் போராட்டம், காவல்துறை அராஜகம், அரசாங்கம் அடக்குமுறை, என்று செய்திகளை போட்டு, சாதாரண மக்களின் மனதை குழப்பி, ஐயோ பாவம் என்று அவர்களின் எண்ணத்தை ஆதரவாக மாற்றி விடுகின்றார்கள். அவர்களை பொருத்தவரை, பரபரப்பு செய்திகள் வேண்டும். TRP ரேட்டிங்கில் அவர்கள் முன்னிலை வகிக்க வேண்டும்.

சாதாரண பொதுமக்களை பொருத்தவரையில் அரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் நியாயம் உள்ளதா? போராடுவது பொதுமக்கள்தானா? இல்லை, வேறு அமைப்புகளை சார்ந்தவர்களா? இந்த போராட்டங்களை திட்டமிடுவது யார்? இதை தூண்டிவிடுவது யார்? அவர்களின் நோக்கம் என்ன? போராடுகின்றவர்களுக்கு, இந்த சட்டங்களின் முழு விபரமுனம், சாதக, பாதக அம்சங்கள் தெரியுமா? என்னென்னலாம் யோசிப்பது இல்லை! உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல் விளையாட்டுகள் அவர்கள் அறிந்திருக்க வாய்ப்புகள் இல்லை. இது நமது நாட்டின் துரதிருஷ்டம். இதில் ஒரு ஆறுதல் என்னவென்றால் எல்லா நாடுகளிலும் பொதுமக்கள் இப்படித்தான் இருக்கிறார்கள்.

இன்றைக்கு அரசியலில் இருக்கும் தலைவர்களை எடுத்துக்கொண்டால், அவர்களின் பலருக்கு அரசியல் தெறியுமே தவிர நிர்வாகம் முழுமையாக தெறியாது. மக்களை கவர்ந்து ஓட்டு வாங்க தெறியுமே தவிர, சமூக பிரச்சனைகளுக்கான மூல காரணமும், வேற்றுமை எண்ணங்களுக்கான உண்மையான காரணமும் அவ்வளவாக தெறியாது.

மக்களுக்கு எது பிடிக்கும் என்பது தெறியுமே தவிர, அவர்களுக்கு எதி நல்லது என்பது தெரியாது! வரலாறு புவியியல் பற்றி எல்லாம் அவர்கள் சிந்திப்பதில்லை. சர்வதேச அரசியல்; நாடுகளின் வர்த்தக யுத்தம்; அரசியல் ஸிரத்தன்மையின் அவசியம்; பற்றி எல்லாம் அவர்கள் கவலைபடுவது இல்லை; அவர்களுக்கு ஓட்டின் மீது உள்ள பற்று அளவு நாட்டின் மீது கிடையாது; தங்கள் பதவியை பாதுகாப்பதில் உள்ள அக்கரை, நாட்டின் எதிர்காலத்தை பாதுகாப்பதில் இருப்பதில்லை!

விஷயத்திற்கு வருவோம். இந்த குடியுரிமை திருத்த மசோதா என்ன சொல்கின்றது. பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் மற்றும் பங்களாதேஷ் ஆகிய மூன்று நாடுகளில் இருந்து அகதிகளாக வந்து இங்கே நமது நாட்டில் 6 ஆண்டுகள் வசிக்கும், ஹிந்து, கிறிஸ்டியன், சீக்கியர்கள், பார்சிக்கள், ஜைனர்கள் மற்றும் பௌத்த மதத்தை சார்ந்தவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்படும் என்பது இதன் சாரம்சம்.

இதற்கு எதிர்ப்பு தெறிவிப்பவர்கள் கூறும் காரணம். குடியுரிமை வழங்குவதில் ஏன் மதபாகுபாடு காட்டுகின்றீர்கள்? அந்த நாடுகளில் இருந்து வரும் முஸ்லிம்களுக்கு ஏன் குடியுரிமை மறுக்கப்படுகிறது. அதுமட்டுமல்ல பர்மா, இலங்கை போன்ற நாடுகளில் இருந்து வரும் அகதிகளுக்கும் குடியுரிமை வழங்கவேண்டும். சட்ட விரோதமாக இந்த நாட்டிற்குள் நுழைந்து விட்ட அனைவருக்கும் குடியுரிமை வழங்கிவிட வேண்டும். இதில் மதம், நாடு என்கின்ற பாகுபாடு இருக்க கூடாது. அனைவருக்கும் குடியுரிமை வழங்க வேண்டும் என்பது எதிர்கட்சிகளின் கோரிக்கை.

இதில் மத்திய அரசின் நிலை என்னவென்றால், இந்த பிரச்சனையில் மத அளவுகோலை பயன்படுத்தாதீர்கள். இந்த சட்டம் முழுக்க முழுக்க, யாருக்கு, தேவை? என்று பார்த்தால், அதன் அடிப்படையில் மட்டுமே உருவாக்கப்பட்டிருக்கின்றது. முஸ்லிம் மக்கள் பெரும்பான்மையாகவும், அவர்களுக்காகவுமே உருவாக்கப்பட்ட அந்த மூன்று நாடுகளிலும், மேற்படி குடியுரிமை சட்டத்தால் பயன்பெற போகின்ற அந்த ஆறு மதங்களை சேர்ந்த மக்கள் மிகவும் துன்பப்படுகின்றார்கள். அச்சுருத்தப்படுகின்றார்கள். அங்கே அவர்களின் உடமைக்கும் உயிருக்கும் உத்திரவாதமில்லை! அந்த நாட்டு மக்கள் இவர்களை பாதுகாக்க முடியவில்லை! அரசுகளும் பாதுகாக்க விரும்பவில்லை! இந்த நிலையில் அங்கேயே உயிரை விடுவது! அல்லது வேறு நாடுகளுக்கு அடைக்கலம் தேடி உயிர் பிழைப்பது! என்ற இரு வாய்ப்புகள்தான் அவர்களுக்கு இருக்கின்றது; மற்ற நாடுகள் ஏற்று கொள்ளாத நிலையில், ஒத்த கலாச்சாரமும், ஒத்த இறைநம்பிக்கையும், கொண்ட பாரதம் மட்டுமே அவர்களுக்கு நெருக்கமான நாடாக இருக்கிறது. ஆகவேதான் அவர்களுக்கு குடியுரிமை வழங்க அவர்கள் வாழ வழி செய்து கொல்வது நமது கடமையாக இருக்கின்றது என்பதாகும்.

நம்மால் முடியும் என்றால் அந்த மூன்று நாட்டு அரசுகளோடு பேசி அவர்களுக்கு அங்கேயே பாதுகாப்பான வாழ்க்கைக்கு உத்திரவாதம் ஏற்படுத்தி தரவேண்டும். அதை செய்வதுதான் சரியான முடிவாகவும் இருக்கும்; ஆனால் அதை செய்வதற்கு அந்த நாடுகளின் அரசியல் சூழல் இடம் கொடுக்காத நிலையில் வேறு வழியின்றி அவர்களுக்கு இங்கே குடியுரிமை வழங்கப்பட்டிருக்கின்றது.

சட்டவிரோதமாக இங்கே வரும் இஸ்லாமியர்களின் நிலை முற்றிலும் வேரானது. அவர்கள் பொருத்தவரை அந்த மூன்று நாடுகளிலுமே அவர்கள் மதம்தான் பெரும்பான்மையாக இருக்கின்றது. அவர்கள் அந்த அரசுகளை எதிர்த்துபோராடி இருக்கின்றது. அவர்கள் அந்த அரசுகளை எதிர்த்து போராடி தங்களுக்கான சட்டப்பூர்வ உரிமைகளை பெறமுடியும். இப்போது அவர்களுக்கு ஆறுதலும், அடைக்கலமும் வழங்குவதற்கு தார்மீக கடமை கொண்ட பல இஸ்லாமிய நாடுகள் உள்ளன. அவர்களின் கலாச்சார மற்றும் வழிபாட்டு முறைகளில் ஒன்றாக உள்ள பல நாடுகள் உள்ளன. அங்கே அவர்கள் அடைக்கலம் கோருவதுதான் பொருத்தமாக இருக்கும்.