குடியுரிமை திருத்தச் சட்டம் குமட்டுதா உனக்கு? பயனாளிகளைப் பாருடா!

குடியுரிமை திருத்தச் சட்டத்தினால் எத்தனை பேர் பயனடையப் போகிறார்கள் என்றால்,  மொத்தமாக 31,313 நபர்கள் மட்டும் தான். (பார்க்க பெட்டிச் செய்தி).

இதைத் தான் பல முஸ்லிம் அமைப்புகளும் எதிர்க் கட்சிகளும் எதிர்க்கிறார்கள். பீதியைக் கிளப்பி பல இடங்களிலும் சாலை மறிப்பில் தொடங்கி கலவரம் வரை கொண்டு விடுகிறார்கள். இதற்குப் போய் இவ்வளவு அலட்டிக் கொள்ள வேண்டுமா என்று இங்கே தமிழ் நாட்டில் வசிக்கும் ஒருவருக்கு புரியாமல் போகலாம். அந்த அளவுக்கு இங்கே ஊடகங்கள் உண்மையை மறைத்தும் தொடர்பில்லாதவற்றை விவாதங்களில் புகுத்தியும் குழப்பம் விளைவிக்கிறார்கள். திசை திருப்புகிறார்கள்.

எண்ணிக்கை என்று மட்டும்  பார்த்தால் உண்மை புரியாது. ஹிந்துக்கள் பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் என்ற 3 நாடுகளில் அனுபவித்த  வலியை உணர முடியாது. அதற்க்கு நாம் 80 ஆண்டு வரலாற்றை பார்க்க வேண்டும்.

இன்றைய பாகிஸ்தானில் உள்ள 4 மாகாணங்களில், பஞ்சாபிலும் (மேற்கு பஞ்சாப்) சிந்துவிலும் தொன்றுதொட்டு ஹிந்துக்கள் வாழ்ந்து வந்திருக்கின்றனர். 1940க்கு முன் லாகூர் நகரத்தில் (பஞ்சாப்) ஹிந்துக்கள் (சீக்கியர்களும் சேர்த்து) பெரும்பான்மையினராக வாழ்ந்துள்ளனர்.  முகமது அலி ஜின்னாவின் மத  அரசியலால்  பிரிவினை ஏற்படுகிறது. பஞ்சாபிலிருந்து லட்சக் கணக்கான ஹிந்துக்கள்  விரட்டி அடிக்கப்பட்டனர். விளைவு, இன்று அந்த மாகாணத்தில் ஹிந்துக்கள் 2 சதவீதம் கூட இல்லை.

சிந்து மாகாணத்தில் வாழ்ந்த ஹிந்துக்கள் அடைந்த இன்னல்கள் சொல்லி மாளாது. மேற்கிலிருந்து வந்த அராபிய. துருக்கிய, மங்கோலிய என்று ஒவ்வொரு படையெடுப்புகளும் தங்கள் கொடுமைகளை முதலில் அரங்கேற்றிய பின் பிரிவினை அன்று மொத்த மக்கள் தொகையில் ஹிந்துக்கள் 26 சதவீதம். 2015  மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது 17 சதவீதமாகக் குறைந்துள்ளது. இங்கு பல புராதன கோயில்கள் இருந்து வந்திருக்கின்றன.  பிரிவினைக்கு முன் இருந்த 428 ஆலயங்களுள் இன்று எஞ்சியிருப்பவை வெறும் 20 தான்.

பாகிஸ்தானில் 1979க்குப் பிறகு ஹிந்துக்கள் நிலைமை மிகவும் மோசமாகியது. ஜியா உல் ஹக் ராணுவ ஆட்சி மதவாதிகள் முன் மண்டியிட்டு இஸ்லாத்தின் ஷரியத் சட்டங்களைப் புகுத்தி முஸ்லிம் அல்லாதவர்களை இரண்டாம் தர பிரஜை
களாக்கியது முதல் காரணம்.

இரண்டாவதாக  அதே ஆண்டு சோவியத் யூனியன் ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்தது. வல்லரசுகள் தங்கள் போட்டா போட்டிக்கு ஆப்கானிஸ்தானில் அன்று   மூட்டிய தீ இன்று வரை தணியவில்லை.  அல் – கொய்தாவும் தாலிபானும் வளர்ந்து ஐ.எஸ். என்று பரிமாணம் அடைந்து பல நாடுகளிலும் பல பல பெயர்களுடன் இயங்கி பயங்கரவாதம் பெருகி விட்டது தான் மிச்சம்.  சவுதி வஹாபி வழி முஸ்லிம்கள் வைத்தது தான் சட்டம்.

பாகிஸ்தானில் ராணுவத்தில்  ஹிந்துக்களுக்கு என்றுமே இடம் இருந்ததில்லை. நீதித்துறையில் உச்ச நீதி மன்றத்தில் நான்கே நான்கு மாதம் இடைக்கால தலைமை நீதிபதியாக இருந்த ராணா பாஹுபலி பகவான்தாஸ் தவிர உயர் பதவிகளை அடைந்தவர்கள் இல்லையென்றே சொல்ல வேண்டும். கிரிக்கட்டில் அபூர்வமாக உள்ள தீபக் கனேரியா போன்ற வெகுசிலர் கூட பல அவமானங்களை சகித்துக்கொள்ள வேண்டியுள்ளது. தீபக்குடன் சேர்ந்து உணவு உண்ண மற்ற விளையாட்டு வீரர்கள் விரும்பவில்லை என்று சமீபத்தில் கூட ஷோயிப் அக்தர் கூறியிருந்தார். ஆப்கானிஸ்தானில் கடந்த 30 ஆண்டுகளில் 2 லட்சமாக இருந்த ஹிந்துக்கள் எண்ணிக்கை இன்று வெறும் 1,000-1,200 என்று சுருங்கிவிட்டது.

பாகிஸ்தானிலும் ஆப்கானிஸ்தானிலும் வாழும் ஹிந்துக்கள் தங்கள் உயிரைக் கையில் பிடித்துக் கொண்டு தான் வாழ்ந்து வருகிறார்கள். பெண்கள் அடையும் அவலம் இன்னமும் மோசம்.  பெண்கள் கட்டாயமாக நிக்காஹ் செய்யப் பட்டு மத மாற்றப் படுகிறார்கள். (கிறிஸ்தவர்களுக்கும் இது தான் நிலை. ஆனால் நம்மூர் லயோலா கல்லூரி CAAக்கு எதிராக மாநாடுகள் நடத்தும்)

பங்களாதேஷ் நாட்டைப் பாருங்கள். அங்கு பிரிவினையின் போது முஸ்லிம் அல்லாதவர் 23.2 சதவீதம். இன்று அதுவே 9.6 சதவீதம். அந்த நாட்டு விடுதலைக்கு நாம் தான் உதவினோம் என்றாலும், ஹிந்துக்கள்  வங்க தேசத்தில் அடைந்த துயரம் பாகிஸ்தானுக்கு சற்றும் குறைந்ததல்ல.

70 ஆண்டுக் காலம் கடந்த பிறகு ஒரு வழியாக CAA வாயிலாக இப்பொழுது தான் ஹிந்துக்களுக்கு விடிவு காலம் பிறந்திருக்கிறது. இது மட்டும் போதாது. பாகிஸ்தானில் வாழும் 80 லட்சம் ஹிந்துக்களுக்கும் பங்களாதேஷில் வாழும் ஒன்றரைக் கோடி ஹிந்துக்களுக்கும்  நேரிடுகிற இன்னல்களை போக்க வேண்டியது பாரத அரசின் கடமை. ஐ.நா. மூலமாக மனித உரிமை மீறல்களுக்கு தீர்வு காண வேண்டும்.