கீதா ஜெயந்தி

* உபநிஷதங்களில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட மலர்களை கொண்டு தயாரிக்கப்பட்ட பூச்செண்டு பகவத்கீதை – விவேகானந்தர்.
* விடுதலை போராட்டத்தில் மக்களை ஈடுபட செய்ய பகவத்கீதைதான் உத்வேகம் தரமுடியும் – பால கங்காதர திலகர்.
* சந்தேகங்கள் அன்னை அலைகழிக்கும்போது, ஏமாற்றங்கள் என்னை எதிர்கொள்ளும்போது, நம்பிக்கையின் ஒரு கிரணம்கூட தென்படாதபோது நான் பகவத்கீதையை திறக்கிறேன். எனக்கு ஆறுதலாக அங்கே ஒரு சுலோகமாவது இருக்கும். பகவத்கீதையை தினமும் படியுங்கள், அதன் பொருளை ஆழ்ந்து சிந்தியுங்கள், நீங்கள் புத்துணர்வு பெறுவீர்கள். உங்கள் வாழ்க்கைக்கு புது அர்த்தம் காண்பீர்கள் – மகாத்மா காந்தி.
*உலகின் எந்த மொழியிலும் பகவத்கீதைக்கு இணையான நூல் இல்லவே இல்லை – மதன்மோகன் மாளவியா.
* குழந்தையிடம் லயித்து கிடந்த தாய்போல மனத்தின் ஒருமுக நிலையை பெறச்செய்வது கீதை – கண்ணதாசன்
* இங்கிலாந்து ஒரு நாள் பாரதத்தை விட்டு வெளியேறலாம், இந்த தேசத்தை ஆண்ட நமக்கு கிடைத்த ஒரு அரிய பொக்கிஷம் பகவத்கீதை. இதன் கோட்பாடுகளை இங்கிலாந்து கடைபிடித்தால் என்றைக்கும் மேன்மையுற்று விளங்கும். – வாரன் ஹேஸ்டிங்க். ஆன்மீக உண்மைகளை இத்தனை தெளிவாக கூறும் தத்துவநூல் பகவத்கீதையை தவிர வேறில்லை – ஆல்டஸ் ஹீக்லி
* ஆன்மீக பூமியான பாரதத்தில் இருந்து, ஆன்மீக கருவூலம் என போற்றப்படும் ஸ்ரீமத் பகவத்கீதையை கொண்டுவரும்படி அலெக்ஸாண்டரிடம் கேட்டனர் அரிஸ்டாடிலும் சாக்ரடீஸும்.
*அமெரிக்க ஞானியான எமர்சனின் மேஜையில் எப்போதும் காணப்படும் நூல் – பகவத்கீதை.
* சுதந்திரம் பெற்றது முதல் இன்றுவரை, வெளிநாடுகளில் இருந்து வரும் தலைவர்களுக்கு அரசு சார்பில் அளிக்கப்படும் நூலும், நம் தலைவர்கள் வெளிநாடுகள் செல்லும்போது பரிசளிக்கும் நூலும் பகவத்கீதை மட்டுமே.