புதிய நாடாளுமன்ற கட்டடிடம் அவசியம் தானா? அதன் நன்மை என்ன?

கொரோன தொற்றுபரவல் சமயத்தில் இதுபோன்ற பல்லாயிரம் கோடி செலவில் பாரத நாடாளுமன்றத்திற்கான புதிய கட்டடம் தேவையா ? நாட்டுமக்கள் பாதிபேர் பசியிலும் பட்டினியிலும் வாடும் நிலையில் ஆடம்பரமான பிரதமர் அலுவலகம் தேவையா, துணை குடியரசு தலைவருக்கு தனி மாளிகை அவசியமா, போன்ற அதிபுதிசாலித்தனமான கேள்விகள் எல்லாம் வந்து கொண்டிருக்கின்றன. இவை அனைத்தும் தங்களது ஆட்சி காலத்தில் துவக்கிய திட்டங்கள்தான் என்பதனை வசதியாக எதிர்கட்சியினர் மறந்து விடுகிறார்கள். தாங்கள் ஆட்சியில் இருந்திருந்தால் இதனை டெண்டர் விட்டு பல கோடி ரூபாய் சம்பாதித்து இருக்கலாமே, இந்த ஆள் தானும் சம்பாதிக்கமாட்டான் நம்மையும் சம்பாதிக்க விடமாட்டானே என்ற வயிற்றெரிச்சல்தான் முக்கிய காரணம்.

சோனியா தலைமையிலான  ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் சபாநாயகராக இருந்த திருமதி மீராகுமார் மத்திய அரசுக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார். அந்த கடிதத்தில் நாடாளுமன்ற பழைய கட்டடம் மழைகாலங்களில் ஒழுகுவதாகவும் நாடாளுமன்ற கூட்டம் நடந்து கொண்டிருக்கும் போதே உள்ளே மழைத்தண்ணீர் உறுப்பினர்களில் மேலே விழுகின்றது. மேலும் சில இடங்களில் கட்டடம் இடிந்து விழுந்துள்ளதாகவும், அது உறுப்பினர்களின் உயிருக்கு ஆபத்தை விளைவிக்கலாம் என்றும் கூறி புதிய கட்டடத்தின் தேவையை அந்த கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார். மேலும், இந்த பழைய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு  100 வருடங்களை நிறைவு செய்துள்ளது. நமது நாட்டில் பல அரசு கட்டடங்கள் 50 வருடங்களை தாண்டினாலே மாற்றிவிட்டு, புதிய கட்டடத்தை கட்டுகிறார்கள், ஆனால் 100 வருடங்களை தாண்டிய நிலையில் உள்ள ஒரு பழைய கட்டடத்தை இடித்துவிட்டு, புதிதாக மாற்றி அமைக்க ஏன் இவ்வளவு எதிர்ப்பு என்பதுதான் புரியவில்லை.

மேலும், இந்த பழைய கட்டடம் ஒன்றும் உலக அதிசயம் இல்லை. நமது நாட்டில் மத்தியபிரதேச மாநிலம், மிரினா மாவட்டம், மிட்டாவாளி. என்ற இடத்தில உள்ள. சௌசாத்யோகினி கோயிலின் மாதிரியை  கொண்டே பாரத நாடாளுமன்றத்தின் கட்டடம் கட்டப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தை கஞ்சகபாகதா வம்சத்தை சேர்ந்த தேவபாலா என்ற மன்னரால் 1055-1075 வருடங்களில்  கட்டப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு ஆங்கிலேய அதிகாரிகள் எட்வின் லுட்டைன்ஸ், கெப்பர்ட்பேக்கர் ஆகிய இரு பொறியாளர்களின் திட்டமிடலுடன் 1921 தொடங்கப்பட்டு 1927ம்  ஆண்டுகளில்  கட்டி முடிக்கப்பட்டது. நூறு ஆண்டுகளை கடந்து விட்ட நிலையில் இன்னும் பழைய கட்டடத்திலேயே வைத்துகொண்டு பயன்படுத்த வேண்டும் என்றால் எப்படி?

நமது  நாடாளுமன்றத்தில் 545 உறுப்பினர்கள் பல்வேறு மாநிலங்களில் இருந்து தேர்ந்தெடு. இவர்களின் எண்ணிக்கை 1960 ம் ஆண்டின் அடிப்படையிலேயே நிர்யணிக்கபட்டுள்ளது. ஓவ்வொரு 2௦ வருடங்களுக்கும் ஒரு முறை நமது நாடாளுமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை மக்கள் தொகை அடிப்படியில் உயர்த்த வேண்டும் என்பது விதிமுறை. விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டு இந்திரா தலைமையிலான காங்கிரஸ் அரசு, நாட்டில்  எமெர்ஜென்சியை  கொண்டுவந்த நிலையில் நாடாளுமன்றத்தில் தனக்கு இருந்த மெஜாரிட்டியை வைத்து எந்த விதமான விவாதம் இன்றி ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி 1990க்கு தள்ளிவைத்தார்கள் ஆனால் 1990களில் தொகுதியைத்தான் மறுவரையரை செய்தார்களே ஒழிய உறுப்பினர்களின் எண்ணிக்கையை கூட்டவில்லை விளைவு சில மாநிலங்களில் ஒரு உறுப்பினர்களை தேர்வு செய்ய 5 லட்சம் மக்கள் வாக்களிப்பார்கள். சில மாநிலங்களில் ஒரு உறுப்பினரை தேர்வு செய்ய பதினைந்து  லட்சம் வாக்காளர்கள் வாக்களிப்பார்கள். இந்த பாகுபாடு உத்திரபிரதேசம், பீகார் போன்ற மக்கள் தொகை நெருக்கமுள்ள மாநிலங்களில் இன்னும் அதிகமாகக் கூட இருக்கும்.

எண்பதுகளின் தொடக்கத்தில் கொண்டுவரப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு சட்டத்தை தென்மாநிலங்கள் சிறப்பாக நடைமுறைப்படுத்தி மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டு வந்துள்ளது . ஆனால்  படிப்பறிவு குறைந்த வட  மாநிலங்களில் இந்த மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை இதனால் தொகுதி வரையறையை ௨௦௦௦ ஆண்டிற்க்கான மக்கள் தொகை அடிப்படையில் வரையறுக்க முடியவில்லை. மேலும் மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளை நிர்ணயம் செய்தால் ஏற்கனவே மக்கள் தொகையை கட்டுக்குள் வைத்திருக்கும் தென்மாநிலங்கள், தங்களில் உறுப்பினர்களின் எண்ணிக்கையை கணிசமாக இழக்க நேரிடும். இது ஏற்கனவே நாடாளுமன்றத்தின் பெரும்பான்மையை நிர்ணயிக்கும் வட மமாநிலங்களின் கையை மேலும் ஓங்கச்செய்யும். இது மக்கள் தொகை கட்டுப்படுத்தும் திட்டத்தை வெற்றிகரமாக நிறைவேற்றி தென் மாநிலங்களுக்கு அநீதியாக முடியும். இது மேலும் பல புது பிரச்சினைகளை உருவாக்கும்.

நாடாளுமன்றதில் ராஜ்ய சபையின் உறுப்பினர்களின் எண்ணிக்கை 245 இதன் உறுப்பினர்கள் மாநிலங்களில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்ககள் மூலமாக  தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கையும் இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை மூன்றில் ஒருபங்கு உறுப்பினர்களின் பதவி காலம் முடிந்து, புதிய உறுப்பினர்கள் தெர்தேடுக்கபடுகிறார்கள். சில சமயங்களில் குறிப்பாக ஆண்டு தொடக்கத்தில் கூட்டப்படும் ஜனாதிபதி உரை, சில முக்கிய தருணங்களில் கொண்டாடப்படும் கூட்டங்கள் குறிப்பாக சுதந்திர பாரதத்தின் பொன்விழா போன்ற சிறப்பு கூட்டங்களை லோக்சபா, ராஜ்யசபா என இரண்டையும் சேர்த்து நடத்துவதற்கு  இடப்பற்றாக்குறையாக உள்ளது. புதிதாக தேர்வு செய்யப்படும் சில அரசுகளுக்கு நாடாளுமன்றத்தின் மேல்சபையில் பெரும்பான்மை பலம் இருக்காது அப்போது இரு சபைகளின்  கூட்டும் கூட்டி  நடத்தப்பட்டு மசோதாக்களை நிறைவேற்றும். இந்த சூழ்நிலையில் சபையை நடத்த போதுமான இடவசதி இல்லை என்பதையும் உணர வேண்டும்.

இதைத்தவிர இனி 2022ம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கின் படி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையை 750ஆக உயர்த்தும் திட்டமும் உள்ளதாக கூறப்படுகிறது. இதன் மூலம் ராஜ்யசபா உறுப்பினர்களின் எண்ணிக்கையும் 440 என்ற அளவில் இருக்கும். இதையெல்லாம் வைத்து பார்க்கும் போது ஒட்டுமொத்தமாக புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் அவசியம் புரியும். இதுத்தவிர குடியரசு தலைவருக்கென்று தனி மாளிகை உள்ளது. ஆனால் ராஜ்ய சபையின் தலைவராக உள்ள  துணை குடியரசு தலைவருக்கென்று தனி மாளிகை இல்லை அதற்கென்று புதிதாக தனி மாளிகை உருவாக்கப்படுகிறது. காங்கிரஸ் ஆட்சி இருந்த வரையில் நேரு. இந்திரா, ராஜீவ் என்று தொடர்ந்து அவர்களின் குடும்பமே ஆட்சி பொறுப்பில் இருந்தது. பின்னர் போர்பஸ் பீரங்கி ஊழலில் ராஜீவ் பதவியை ராஜினாமா செய்த பின்னர் வந்த விபி.சிங், சந்திரசேகர் அதற்கு பின்னர் வந்த பி.வி.நரசிம்மராவ், தேவகௌடா, ஐ.கே.குஜ்ரால், வாஜ்பாய்  போன்ற பிரதமர்களும்  பிரதமர் பதவிக்கான இல்லத்தை சோனியா குடும்பத்தை கேட்டு வாங்கவில்லை. அவர்களும் கொஞ்சம் கூட வெட்கமின்றி அந்த பங்களாவை தங்களது பரம்பரை சொத்தாக இன்று வரை பயன்படுத்தி வருகின்றனர். இசட் பிளஸ் பாதுகாப்பு என்ற பெயரில் நாட்டின் சொத்தை தங்களது சுயநலத்துக்கு பயன்படுத்தும் ஒரு குடும்பம் இன்று வரை அதற்கு எந்த விதமான வாடகையையும் செலுத்துவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அதற்கு பின்னர் வந்த மற்ற பிரதமர்கள் எல்லாம் புதிய பங்களாக்களை தேர்ந்தெடுத்து அதனை பிரதமர் இல்லமாக மாற்றி கொண்டார்கள். இந்த நிலையில் தான் புதிய பிரதமருக்கான அலுவலகத்தோடு கட்டடம் அவசியமாகிறது.

மேலும், இந்த புதிய கட்டடத்துக்கு ஆகும் தொகை வெறும் 1000 கோடி ரூபாய்தான் இந்த ரூபாயில் 9000  சதுர அடிக்கு கட்டடங்கள் கட்டப்படும். மேலும் இதுவரை டெல்லியை சுற்றியுள்ள பல இடங்களில் வாடகை கட்டடங்களில் இயங்கும் அரசு அலுவலகங்களியெல்லாம் ஒரே இடத்தில கொண்டு வருவதன் மூலம் ஒரு ஆண்டிற்கு மட்டும் ஆயிரம் கோடி ரூபாயை மிச்சப்படுத்தப்படும். இந்த தொகை மிகையாக  சொல்லப்பட்டால் கூட ஒறிரண்டு ஆண்டுகளில் மொத்தப் பணமும் சரிசெய்யப்படும். மீதமுள்ள ஆண்டுகளில் அந்த செலவு மிச்சமாகும். இப்படி எந்த விதத்தில் பார்த்தாலும் புதிய நாடாளுமன்ற கட்டடம் அவசியமே! அதனை எதிர்ப்பவர்களின் மனோநிலை எதை புதிதாகக் கொண்டுவந்தாலும் நாங்களும் இருக்கிறோம் என்பதனை காட்டிக்கொள்ள மூன்றாம் தர அரசியல்வாதிகள் அறிக்கைவிடுவது போலத்தான் இருக்கும். எந்த வகையில் பார்த்தாலும் புதிய நாடாளுமன்ற கட்டடத்தின் தேவை அவசியமே என்பதே உண்மை.