காலில் அறுவை சிகிச்சை நடந்த மறுநாளே இன்டர்மீடியட் தேர்வு எழுதிய மாணவர்கள்

விபத்தில் காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட மறுநாளே ஆந்திராவில் இன்டர்மீடியட் தேர்வு எழுதிய மாணவர்களை கண்டு சக மாணவர்களும், ஆசிரியர்களும் பாராட்டு தெரிவித்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் தற்போது இன்டர்மீடியட் தேர்வுகள் நடைபெற்று வருகிறது. இதில், நிர்மல் மாவட்டத்தில் லோகேஷ்வரம் மண்டலம், தர்மோரா கிராமத்தை சேர்ந்த மகேஷ் மற்றும் அவரது நண்பர் சல்மான் ஆகிய இருவரும் கடந்த திங்கட்கிழமை இரவு பைக்கில் சென்றபோது விபத்து ஏற்பட்டது.
இதில் இருவரின் கால்களிலும் முறிவு ஏற்பட்டது. உடனடியாக இருவரும் நிர்மல் பகுதியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட னர். கண்டிப்பாக தேர்வு எழுத வேண்டுமென சிகிச்சை அளித்தமருத்துவர் பிரமோத் சந்திராரெட்டியிடம் இருவரும் கேட்டுக்கொண்டனர். இதற்கு சம்மதித்த மருத்துவர், இருவருக்கும் உடனடியாக கால்களில் அறுவை சிகிச்சை செய்தார். பின்னர் இரு மாண வர்களும் நேற்று ஆம்புலன்ஸ் மூலம் தேர்வு மையத்துக்கு உதவியாளர் உதவியோடு அழைத்து செல்லப்பட்டனர்.
பின்னர் ஆம்புலன்ஸில் இருந்து சக்கர நாற்காலி உதவியுடன் தேர்வு மையத்துக்கு சென்று காலில் வலியோடு தேர்வு எழுதினர். இவர்களின் தன்னம் பிக்கை மற்றும் தேர்வு மீது இருந்த ஆர்வத்தை பார்த்து சகமாணவர்கள் மட்டுமின்றி ஆசிரியர்களும் ஆச்சரியப்பட்டு, இவர்களை பாராட்டினர்.