காந்திஜி வாழ்வில் திருப்புமுனை மதுரையில்; மகான்களின் வாழ்வில்

மகாத்மா காந்திஜி வாழ்க்கையில் நடைபெற்ற ஒரு திருப்பு முனை சம்பவம் தமிழகத்தில்தான் நடைபெற்றது. காந்திஜி மதுரை விஜயத்தின்போது மேலமாசி வீதியில் ஒரு வீட்டில் தங்கியிருந்தார். காலை நேரத்தில் ஏராளமான ஏழை எளிய மக்கள் ஒரு வேஷ்டி, துண்டுடன் செல்வதைப் பார்த்து கண்கலங்கினார். தனது நாட்டு மக்களுக்கு முழுமையான உடைகூட இல்லையே என்று நினைத்தவர் திடீரென்று ஒரு முடிவெடுத்தார். நாட்டு மக்கள் அனைவருக்கும் முழு உடை கிடைக்கும் வரை தானும் ஒரு வேஷ்டியும், துண்டும் அணிவது என்று முடிவெடுத்து அன்றே அந்த உடைக்கு மாறினார்.

இங்கிலாந்தில் நடைபெற்gandhiற ஒரு வட்ட மேஜை மாநாட்டிற்கு இந்தியாவின் பிரதிநிதியாக இதே உடையில்தான் சென்றார். மாநாடு முடிந்த பிறகு இங்கிலாந்து மன்னரைச் சந்திக்கச் சென்றார். மன்னரின் உதவியாளர் காந்திஜி அணிந்திருந்த உடையைப் பார்த்து அவரை உள்ளே அனுப்பத் தயங்கினார். அப்போது காந்திஜி இந்த உடையில் உங்கள் மன்னர் என்னை சந்திக்கத் தயாரா என்று அவரிடமே கேட்டுச் சொல்” என்றார். பிறகு மன்னரும் சந்தித்தார். சந்தித்துவிட்டு திரும்பும்போது ஒரு பத்திரிகை நிருபர் இப்படி அரை குறை ஆடையில் மன்னரை சந்தித்தது சரிதானா?” என்று கேட்டார்.

அப்போது காந்திஜி சிரித்துக்கொண்டே உங்கள் மன்னரும் எனக்கும் சேர்த்து ஆடை அணிந்திருக்கிறாரே” என்றார். ‘எங்கள் நாட்டைச் சுரண்டிய பணத்தில்தானே நீங்கள் இந்த ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள்’ என்பது தான் அதில் தொனித்த மறைமுகமான செய்தி.

எத்தனையோ மகான்கள் இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும் நமது வணக்கங்கள்