எமனும் பயந்தான்

ஆர்.எஸ்.எஸ் ஸ்தாபகர் டாக்டர் ஹெட்கேவார் உடல்நலன் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். முதுகில் கடுமையான வலி. தொடர்ந்து காய்ச்சல் அதிகமாகி கொஞ்சம் கொஞ்சமாக நினைவு இழந்து வந்தார். அவரது உதடுகள் மெல்லியதாக அசைந்தன. ஏதோ முனகல் சத்தம் கேட்டது. என்னவென்று கவனித்தபோது, ஹிந்து ராஷ்ட்ரம் – சங்கம் – ஷாகா – ஸ்வயம்சேவக்” என்று வார்த்தைகள் வெளிவந்தன.

உடல் நலிந்து நினைவு இழந்தபோதும் சங்க சிந்தனையே அவரது மூச்சில் இழையோடிக் கொண்டிருந்தது.

டாக்டர்ஜி நூற்றாண்டு விழாவை முன்னிட்டு நடைபெற்ற நிகழ்ச்சியில் வில்லிசை கலைஞர் சுப்பு, டாக்டர்ஜியின் வாழ்க்கையை பாடல்களாக இயற்றி பாடிக் கொண்டிருந்தார்.

டாக்டர்ஜியின் முகத்தை நேரில் சந்தித்த எவரும் ஆர்.எஸ்.எஸ்ஸில் இணைந்து விடுவார்கள். அதனால்தான் எமன் கூட அவருக்கு நேராக வராமல் முதுகின் வழியே வந்து அவரின் உயிரை எடுத்துச் சென்றான்” எனப் பொருள்படும் விதமாய் நெஞ்சம் உருகப் பாடினார். அனைவரின் கண்களிலும் கண்ணீர் பெருகியது.

எத்தனையோ மகான்கள்  இந்த ஞான பூமியில்

அத்தனை பேருக்கும்  நமது வணக்கங்கள்