உலக அமைதி வேண்டி – காஷ்மீரிலிருந்து குமரி வரை தொடர் ஓட்டம்

உலக அமைதி வேண்டி ராஜஸ் தானை சேர்ந்த சுபியா (33) என் பவர், காஷ்மீரில் இருந்து 4,035 கிலோ மீட்டர் தூரத்தை 90 நாட்களில் ஓடி கடந்து, நேற்று கன்னியா குமரி முக்கடல் சங்கமத்தை வந் தடைந்தார். கடற்கரையில் முத்த மிட்டு அவர் ஆனந்த கண்ணீர் வடித்தது சுற்றுலா பயணிகளை நெகிழ்ச்சியில் ஆழ்த்தியது.

ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரை சேர்ந்தவர் சுபியா(33). தடகள வீராங்கனையான இவர், இந்திய விமானத் துறையில் ஊழியராக பணி புரிகிறார். திருமணமாகாத இவர், உலக அமைதி, மனிதநேயம் ஆகியவற்றை வலியுறுத்தியும், கின் னஸ் சாதனை முயற்சியாகவும் காஷ் மீரில் இருந்து கன்னியாகுமரிக்கு தொடர் ஓட்டப்பயணம் மேற் கொள்ள முடிவு செய்தார்.

கடந்த ஏப்ரல் மாதம் 21-ம் தேதி காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் இருந்து தேசியக் கொடியை ஏந்திய வாறு தனது ஓட்டத்தை தொடங்கி னார். தினமும் 50 கிலோ மீடடர் வீதம் 14 மாநிலங்களை சேர்ந்த கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகள் வழியாக 100 நாட்களுக்குள் 4,000 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து கன்னியாகுமரியை அடைய அவர் திட்டமிட்டிருந்தார்.

ஆனால், அதற்கு முன்ன தாகவே, அதாவது 90 நாட்களுக்குள் 4,035 கிலோ மீட்டர் தூரத்தை ஓடிக் கடந்து நேற்று கன்னியாகுமரி முக் கடல் சங்கமத்தை சுபியா வந் தடைந்தார். இதனையடுத்து  பத்மநாபபுரம் சார் ஆட்சியர் மற்றும் குமரி மாவட்ட தடகள சங்கத்தினர் வர வேற்றனர்.

பின், இந்த ஓட்டத்தை குறித்து அவர்கள் ‘‘சுபியாவை போல் இதுவரை இந்தியாவை சேர்ந்த எந்த பெண்ணும் இவ்வளவு நீண்ட தூர தொடர் ஓட்டத்தை மேற் கொள்ளவில்லை. அவரது சாதனை ஓட்டத்தை கின்னஸ் சாதனை புத் தகத்தில் இடம்பெறச் செய்ய உரிய ஏற்பாடுகள் செய்து வருகிறோம். கின்னஸில் நிச்சயம் அவரது பெயர் இடம்பெறும்’’ என்றனர்.