அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு கூடுதல்வசதிகளை ஏற்படுத்த முடிவு

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் கடந்த 21 நாட்களாக நடைபெறும் அத்திவரதர் எழுந்தருளும் வைபவ விழாவில் இது வரை 23 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்துள்ளனர். பக்தர்களுக்கான வசதிகள் மற்றும் முன்னேற்பாடு களை மேற்கொள்ள தமிழக அரசு சார்பில் மூத்த ஐஏஎஸ் அதிகாரிகள் இருவர் கண்காணிப்பாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதையடுத்து, மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அனைத்துதுறை அலுவலர்களுடன் நேற்று காலை ஆலோசனைக் கூட்டம் நடந்தது.

பின்னர், தலைமைச் செயலாளர் சண்முகம் அத்திவரதரை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு பல்வேறு கூடுதல் வசதிகளை ஏற்படுத்த முதல்வர் உத்தரவிட்டுள்ளார் என்றார். இதன் மூலம், சில திருத்தங்கள் மற்றும் கூடுதல் வசதிகள் ஏற்படுத்த அதிகாரிகளுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன.

அவை,

  • பக்தர்களுக்கு கூடுதலாக கழிப்பறைகளை அமைக்க அறிவுறுத்தியுள்ளோம்.
  • வரிசையில் நிற்கும் பக்தர்களுக்கு தண்ணீர், பிஸ்கட் மற்றும் சுவாமி தரிசனம் முடித்து திரும்பும் பக்தர்களுக்கு பழச்சாறு வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
  • பக்தர்கள் வரிசையில் செல்லும் இடங்களில் கூடுதல் மின் விசிறிகள் பொருத்தப்படும்.
  • கோயிலுக்கு செல்லும் சாலைகளில் வழிகாட்டி பலகைகள் மற்றும் வரைபடங்கள் அமைக்கப்படும்.
  • பக்தர்களுக்கு சேவை செய்ய 1000 ஊர்க்காவல் படையினர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
  • விடுமுறை நாட்களில், அதி காலை 4 மணிக்கு தரிசனத்தை தொடங்க வேண்டும் என அறநிலையத் துறைக்கு பரிந்துரைத்துள்ளோம்.

பொதுமக்கள் அத்திவரதர் தரி சன நேரம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அறிந்து கொள்வதற் காக, மாவட்ட ஆட்சியர் அலுவலகத் தில் கட்டுப்பாட்டு அறை மற்றும் பொதுமக்கள் ஒருங்கிணைப்பு மையம் செயல்பட உள்ளது. உதவி தேவைப்படும் நபர்கள் 18004258978 மற்றும். 044-27237425, 27237207ஆகிய தொலைபேசி எண்களை இலவசமாக தொடர்பு கொண்டு தகவல்களை பெறலாம். இவ்வாறு தலைமை செயலாளர் தெரிவித்தார்.