உரீ தாக்குதல்: வஞ்சிக்கப்பட்ட தமிழ் வாசகர்கள்

எதிரிகளை கொல்லும் ராணுவ ஜவான்களாக பொறுப்பேற்றவர்கள் தங்கள் உயிரை பணையம் வைத்தே செயல்படுகிறார்கள் என்பதை நினைவு படுத்திக்கொள்ளவேண்டிய தருணம் இது (Time to remember that when people sign up to be ­soldiers and kill the enemy, they offer to risk their lives)”  š சோன்னவர் மாலினி பார்த்தசாரதி.

செப்டம்பர் 18 அன்று அதிகாலையில் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் உரீ ராணுவ முகாமில் பாகிஸ்தான் ஆதரவு பயங்கரவாதிகளின் கோழைத்தனமான தாக்குதலில் ராணுவ வீரர்கள் 17 பேர் கொல்லப்பட்டனர். ஆனால் உள்ளே நுழைந்த நான்கு பயங்கரவாதிகளும் சல்லடையாக்கப்பட்டனர். வீரர்களை இழந்த இந்திய ராணுவமும் பொதுமக்களும் சோகத்திலும் கோபத்திலும் துடித்துக் கொண்டிருந்த போது ‘தி ஹிந்து’ ஆங்கில நாளிதழின் ஆசிரியர் குழுவில் ஒருவரான மாலினி பார்த்தசாரதி விடுத்த டிவிட்டர் செதிதான் மேலே உள்ளது.

கம்யூனிஸ்ட்கள் ஆதிக்கத்தில் உள்ள ஊடகங்கள் நமது வீரர்களின் தியாகத்தை எந்த அளவு கொச்சைப்படுத்தி மகிழ்ச்சி கொள்கின்றன என்பதற்கு இது ஒரு எடுத்துக்காட்டு. ஏற்கெனவே கார்கில் யுத்தத்தின்போது கம்யூனிஸ்ட் பத்திரிகையாளர் ஞாநி இது போல கருத்து தெரிவித்து சர்ச்சை உருவாக்கியதாக ஞாபகம்.

இவர்கள் ராணுவ வீரர்களுக்கு மரியாதை செய வேண்டாம், அவமரியாதை செயாமலாவது இருந்திருக்கலாமே.!  ஆனால் இவர்களால் அது முடியாது. இந்திய š சீனப் போரின் போது மறைந்த ஜோதிபாசு தலைமையில் சீன ராணுவத்தை வரவேற்க அருணாச்சலப் பிரதேசம் சென்றவர்கள் அல்லவா நம் கம்யூனிஸ்டுகள்!

வழக்கம் போலவே என்.டி.டி.வி. பாகிஸ்தானை காப்பாற்றும் வேலையில் இறங்கியிருந்தது. லெப்டினன்ட் ஜெனரல் ரன்பீர் சிங் பயங்கரவாதிகளிடம் இருந்து கைப்பற்றிய ஆயுதங்களில் பாகிஸ்தான் முத்திரை இருந்தது, முதல்கட்ட விசாரணையில் ஜைஷ் எ முகமது அமைப்புதான் இந்த தாக்குதலை நடத்தியதாகத் தெரிகிறது எனக் கூறியிருந்தார், இந்தச் செதியை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகள் வெளிநாட்டவர், முதல்கட்ட ஆவுகள் ஜைஷ்-எ-முகமது மீதுதான் சந்தேகத்தை வரவழைத்துள்ளது என்று லெப் ஜெனரல் ரன்பீர் சிங் கூறினார் என திரித்து வெளியிட்டது என்.டி.டி.வி. ஆனால், டைம்ஸ் நவ் உண்மையை புட்டு புட்டு வைத்து தேசத்தின் ஆன்மாவை தட்டி எழுப்பியது.

இவ்வாறு ஆங்கில அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் உரீ தாக்குதலை பிரதானச் செதியாக வெளியிட்டு, விவாதங்கள் நடத்திக் கொண்டிருந்த போது தமிழ் ஊடகங்கள் இதுபற்றி பெரிதாக ஏதும் கண்டு கொள்ளவில்லை.

உரீ தாக்குதலைத் தொடர்ந்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் பாகிஸ்தானை பயங்கரவாத ஊக்குவிப்பு நாடாக அறிவித்து புறக்கணிக்க வேண்டும் என குடியரசுக்கட்சி, ஜனநாயக்கட்சி ஆகிய கட்சிகளின் இரு எம்.பி.கள் இணைந்து மசோதா ஒன்றை  கொண்டுவந்துள்ளனர் என்பது தமிழ் ஊடகங்களுக்குச் செதியாகத் தெரியவில்லை.

அதேபோல, உரீ தாக்குதலைக் கண்டித்து பாகிஸ்தானுடன் இணைந்து நடத்தும் ராணுவ பயிற்சியை நிறுத்திவிட்டதாகவும் மிக் ரக விமானங்களை பாகிஸ்தானுக்கு இனி தர இயலாது எனவும் ரஷ்யா அறிவித்திருப்பது இங்கு செதியாகவில்லை.

ஐக்கிய நாட்டு பாதுகாப்பு கவுன்ஸில் அமைப்பைச் சேர்ந்த பிரான்ஸ் நாடு உரீதாக்குதலுக்குக் காரணம் பாகிஸ்தானே என நேரடியாக குற்றம் சாட்டியிருப்பதும் இங்கு செதியாகவில்லை.

ஐநா சபையில் பாகிஸ்தான் அதிபர் காஷ்மீர் பிரச்சினை எழுப்ப முயன்றபோது அமெரிக்காவும் இங்கிலாந்தும் அதை எழுப்பவிடாமல் செததும் தனது நிறைவுரையில் பான் கீ மூன் காஷ்மீர் விவகாரத்தைப் பற்றி மூச்சுக் கூட விடாததும் தமிழ் ஊடகங்களில் செதியாகவில்லை.

சிங்கப்பூரில் இருந்து வெளிவரும் தமிழ் நாளிதழான தமிழ்முரசில் கூட உரீ தாக்குதலே தலைப்புச் செதி.military3

ஆனால் தமிழகத்தில் சுவாதி கொலைக் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராம்குமாரின் தற்கொலையே தலைப்புச் செதி. ஒரு பிரபல நாளிதழ் இச்செதியை முதல் பக்கத்தில் கூட கொண்டு வரவில்லை. தேசப்பாதுகாப்பைவிட, தேசத்தின் மீதான தாக்குதலைவிட ஒரு கைதியின்  தற்கொலை இங்கு முக்கியத்துவம் பெற்றிருந்தது. கொடுமையிலும் கொடுமை, ராம்குமார் ‘தற்கொலை’ விவாதத்தில் மூழ்கிப்போன நியூஸ் 7 தொலைக்காட்சி, தனது விவாதத்திற்கு தேசவிரோதி ஒருவனை அழைத்ததுதான். தேசியக் கொடியை எரித்து, அதை தனது முகநூலில் பதிவிட்டதால் கைது செயப்பட்டு, தற்போது பிணையில் வெளியில் உலவிவரும் திலீபன் என்பவன்தான் அந்த அழைப்பாளி.

திலீபன் தனது விவாதத்தின் போது பாஜக மாநிலப் பொறுப்பாளர்களில் ஒருவரான கருப்பு முருகானந்தத்தை அவன் இவன் என்று ஒருமையில் பேசியது மட்டுமல்லாமல், சுவாதியைப் பற்றி குறிப்பிடும் போது பார்ப்பான், பாப்பாத்தி என்றெல்லாம் பேசியிருக்கிறான். ஹிந்து விரோத கருத்துக்களை வெளியிடுவதில் அதீத ஆர்வம் காட்டும் நிகழ்ச்சியின் நெறியாளர் நெல்சன் சேவியர், திலீபனை இடைமறித்து மரியாதையாக பேசுமாறு உதட்டளவில் கூட கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டு பெரும் அளவில் எழுந்துள்ளது.

ஒரு தொலைக்காட்சி நிறுவனம் தனது நிகழ்ச்சிகளுக்கு யை எரித்த ஒருவனை எப்படி அழைக்க முடிகிறது, அந்தத் தொலைக்காட்சி நிறுவனம் இந்த தேசத்தின் மீது என்ன மரியாதை வைத்திருக்கிறது என்றும் கேள்வி எழுந்துள்ளது.

தமிழ் ஊடகங்கள் தேசியத்துக்கு முக்கியத்துவம் அளிக்காமல், பரப்பரப்புக்கு முக்கியத்துவம் அளித்து வந்தாலும் டிவிட்டர் தளத்தில் பலர் உரீ தாக்குதல் பற்றி மத்திய அரசுக்கு தங்கள் கவலைகளையும் கோபத்தையும் வெளிப்படுத்தி பதிவேற்றியிருந்தனர்.

** பொதுவாக மோடிக்கு எதிராகவே கருத்து வெளியிடும் பிரபல பத்திரிகை ஆசிரியர் சேகர் குப்தா, உரீ தாக்குதலை இந்தியா வழக்கம் போல ஏதும் செயாமல் ஏற்றுக்கொள்ளும் என பாகிஸ்தான் நினைத்தால் அது மாயை. ஒரு வியூகத்துக்காக அடக்கி வாசிக்கும் பழைய நிலையில் இருந்து இந்தியா முன்னேறிவிட்டது  (If Pakistan thinks #UriAttack will have usual Indian non&response, it’s delusional. This India has moved on from old strategic restraint ) என டிவிட்டரில் பதிவேற்றி இருந்தார். பாகிஸ்தான் உடனான சிந்து நதி நீர் பகிர்வு ஒப்பந்ததை ரத்து செதாலே பாகிஸ்தானை தண்டித்து விடலாம் என்றும் கூறியிருந்தார்.

** வீர மரணம் எதிய நாயக் சுனில் குமார் வித்யார்த்தியின் மகள்கள் மூவரும், தந்தையாரின் பூத உடலை எதிர்நோக்கி இருந்த நிலையிலும் கலங்காமல், பள்ளியில் பரீட்சைக்குச் சென்ற தைரியத்தை மேனகா காந்தி வியந்து பதிவிட்டிருந்தார்.

** மற்றொரு தியாக வீரர் ஹவில்தார் ரவிபால் சல்கோத்ராவின் 10 வயது மகன், தந்தையின் கனவை நனவாக்குவதற்காக நான் மருத்துவராகி, ராணுவ டாக்டராக பணியில் சேர்வேன் என்று கூறியிருந்ததை புகைப்படத்துடன் வெளியிட்டு பாராட்டிய டிவிட்டராளிகள் ஏராளம்.

** வீரமரணம் எதிய ராணுவத்தினருக்கு குஜராத் மாநிலம் சூரத்தைச் சேர்ந்த குறிப்பிட்ட பள்ளி மாணவர்கள் அஞ்சலி செலுத்திய காட்சியின் புகைப்படம் ஒன்று பரவாலாக சமூக ஊடகங்களில் பகிரப்பட்டிருந்தது. பார்த்தாலே நெஞ்சம் கரையும் காட்சியாக அது இருந்தது.

சேகர் குப்தா சோல்லியது போல இன்றைய இந்தியா அமைதியாக இருந்து விடவில்லை. இந்திய ராணுவம் உரீயை சுற்றியுள்ள எல்லைப் பகுதிகளில் தன் கண்காணிப்பை அதிகரித்திருப்பதோடு பத்துக்கும் மேற்பட்ட ஊடுருவல்காரர்களை அடையாளம் கண்டு தீர்த்துக் கட்டிவிட்டது.

வேட்டை தொடர்கிறது…!