பதிலடி கொடுக்கும் பாரதம்

எமது ஒரு பல்லை உடைத்தால்

உனது தாடையை உடைப்போம்.

செப்டெம்பர் 18 அதிகாலை – ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உரீ பகுதியில் அமைந்துள்ள ராணுவ முகாமில், எல்லைத் தாண்டி வந்த தீவிரவாதிகளின் தாக்குதலால் 18 இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர்.  4 தீவிரவாதிகள் நமது படையினரால் கொல்லப்பட்டனர்.  இந்தியாவின் மீது எல்லை தாண்டிய பயங்கரவாதம் அவ்வப்போது நடப்பதும், அதை எதிர்த்து இந்திய அரசு, பாகிஸ்தானை கடும் எச்சரிக்கை செவதும் வழக்கமாகி விட்டது.

2008ம் ஆண்டு நடைபெற்ற மும்பை தாக்குதலில் ஈடுபட்ட பாகிஸ்தானியர்களை நமது நாடு இன்னும் தண்டிக்கமுடியாத சூழல் இருந்து வருவதும், அண்மையில் பதான்கோட்டில் நடைபெற்ற தாக்குதலுக்கு நம்மால் பதிலடி கொடுக்க முடியாத சூழல் விளங்குவதும், பொது மக்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே சமயம், மக்களின் இந்த எதிர்பார்ப்புகளுக்கு இந்திய அரசு செவி சாக்குமா என்பதும் மற்றொருபுறம் கேள்விக்குறியாக உள்ளது.

உரீ தாக்குதலை அடுத்து சில நிமிடங்களிலேயே, பா.ஜ.க.வின் தேசிய பொதுச் செயலாளர் ராம் மாதவ், ‘இந்தியாவின் military2ஒரு பல்லை உடைத்தால், அதற்குப் பதிலாக எதிரியின் தாடையையே உடைப்போம்‘ என்று அறைகூவல் விடுத்தார்.  சில சமயங்களில், அறைகூவல்கள் விடுவது எளிதானதாக தோன்றினாலும், அந்த அறைகூவல்களுக்கு பின்புறம் இருக்கும் பல்வேறு செயல்முறை நடவடிக்கைகளை உற்றுநோக்குவது கட்டாயம்.  இந்தியா தனது எதிரியான பாகிஸ்தானை போரில் சந்திக்குமானால், அதன் சாதக பாதகங்களை அலசி ஆராந்து, வெற்றி தோல்விகளை நடுநிலைமையுடன் கருத்தில்கொண்டு, அதன்பின்தான் செயலில் இறங்க வேண்டியுள்ளது.  நம்மால் பாகிஸ்தானை வெற்றிகொள்ள முடியாது என்பது அர்த்தமல்ல.  இதற்கு முன் நடந்த அனைத்து போர்களிலும் இந்தியாவே பாகிஸ்தானை வீழ்த்தியுள்ளது என்பது வரலாற்று உண்மை.

வெற்றிபெறும் எண்ணம் மட்டும் இருந்தால் போதாது.  எங்கு? எப்பொழுது? எந்த இடத்தில்? இந்த மூன்று கேள்விகளையும் தீர்மானிக்கும் உரிமை நம்மிடமே இருக்கவேண்டும்.  அதாவது, முதலில் யார் தாக்குவது?  நாமா? அல்லது அவர்கள் தாக்கியபின் அதற்கு எதிர் தாக்குதலா?  போரின் வெற்றி அல்லது தோல்வி இந்த கேள்விக்கான பதிலிலேயே பெரும்பாலும் அமைந்திருக்கின்றது.

ஏற்கனவே எல்லையைத் தாண்டி வந்து நமது ராணுவப்பாசறைகள் மீது வெடிகுண்டுகள் வீசும் பாகிஸ்தான் தீவிரவாதிகளை, வேரோடு அழிக்க ஒரே வழி, இந்தியா முதலில் பாகிஸ்தானை நோக்கி தனது தாக்குதலை தொடங்குவது தான்.  அதேசமயம் எந்த இடத்தில் தாக்குதல் தொடர்வது, எந்த சமயத்தில் தாக்குதல் தொடர்வது என்பதும் முக்கிய அம்சங்கள்.  எதிரி எந்த இடத்தில் படைபலம் குறைவாக இருக்கிறானோ அப்போது தாக்குவதுதான் உசிதம்.  அதேசமயம், எதிரி மிகவும் எதிர்பார்க்காத தருணத்தில் தாக்குவதும் இன்றியமையாத ஒன்று.

எனவே, எங்கு? எப்பொழுது? எந்த இடத்தில்? என்ற இந்த மூன்று கேள்விகளுக்கும் இந்திய அரசு தனது பதில்களை தயாராக வைத்திருப்பதும் இவற்றுக்கான முடிவுகளை கடந்த ஒரு வார காலத்தில் எடுத்துவிட்டதாகவும் தகவல் அறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  இதன் முதல்படியாக, கடந்த வாரத்தில் 18 அல்லது 20 வீரர்களை கொண்ட இந்தியக் குழு ஒன்று ஹெலிகாப்டர்கள் மூலம், பாகிஸ்தான் வசமிருக்கும் இந்திய பகுதிகளுக்கு சென்று, சுமார் 20 தீவிரவாதிகளை வேட்டை ஆடியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.  இந்த வேட்டையாடல் உரீ பகுதிக்கு மிக அருகில் உள்ள இடத்திலேயே நிகழ்ந்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.  இது மட்டுமல்லாமல், நாட்டின் பல்வேறு ராணுவ பாசறைகளிலிருந்து, பீரங்கிகள் ரயில் மூலம் எல்லைநோக்கி அனுப்பப்படுவதாகவும் அந்த பீரங்கிகள் உரீ பகுதிக்கு அருகாமையிலேயே குவிக்கப்பட்டுவருவதாகவும் தெரிகின்றது.  உரீ பகுதியின் சிறப்பம்சம் என்னவென்றால், அங்கு அமைந்துள்ள நமது ராணுவப் பாசறையிலிருந்து சுமார் 7 அல்லது 8 கிலோமீட்டர் தொலைவிலேயே, பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள இந்தியப் பகுதிகள் அமைந்திருப்பதும் நமது பாசறையிலிருந்து குண்டு மழை பொழிந்தாலே, அவை எதிரிகளை தாக்கும் வல்லமை கொண்ட பீரங்கிகள் நம்மிடம் இருப்பதும்தான்.  ஆகவே, குவிக்கப்படுகின்ற பீரங்கிகளும் ரயில் மூலம் சாரி சாரியாக அனுப்பப்படும் நமது காலாட்படை வீரர்களும் எதிரிகளை துவம்சம் செயும் சக்தி வாந்தவர்கள் என்பதில் ஐயமில்லை.

போர் என்று வரும்போது, அதில் வெற்றிபெறப்போவது இந்தியாதான் என்பதில் சந்தேகமில்லை.  ஆனால், நமது வெளியுறவுத்துறை அதிகாரிகள் அவ்வப்போது சில ஐயப்பாடுகளையும் தெரிவிக்கின்றனர்.  பாகிஸ்தான் தனது எல்லைப்புறத்தில் அணுகுண்டுகளை வீசும் ஏவுகணைகளை குவித்திருப்பதாகவும் போர் எழும்பட்சத்தில் அந்த அணுகுண்டுகளை நமது நாட்டின் மேல் வீசினால் நமது நிலை என்ன ஆகும்? என்பதே அந்த ஐயப்பாடு.

இத்தகைய சூழலில் நமக்கு இருக்கும் ஒரே வாப்பு, உலக நாடுகளிலிருந்து பாகிஸ்தானை தனிமைப்படுத்துவதும் பாகிஸ்தானை தீவிரவாத நாடு (கூஞுணூணூணிணூடிண்ணா குணாச்ணாஞு) என்று அறிவிக்க வைப்பதும் தான்.  இதற்கான முதல்படியாக, சார்க் கூட்டமைப்பிலிருந்து பாகிஸ்தானை விரட்டி அடிப்பதும், பாகிஸ்தான் தவிர, மீதமுள்ள சார்க் நாடுகளை நமது நண்பர்களாக்கிக் கொள்வதும் அவசியம்.  அதையடுத்து, ஜைஷ்-ஈ-முஹம்மது அமைப்பின் தலைமையிடம் அமைந்துள்ள இடத்தை (இது ராணுவ ரகசியம் என்ற காரணத்தால் கட்டுரையாளர் இந்த இடத்தின் பெயரை வெளியிட மறுத்துவிட்டார்) நமது எல்லையிலிருந்து நேரடித் தாக்குதலுக்கு உட்படுத்துவது.  இந்தத் தலைமையிடம் நமது எல்லையிலிருந்து 28 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால், நமது பீரங்கிகள் இதை மிகவும் துல்லியமாக செதுவிடும்.  ஆசியக் கண்டத்தின் கொடூரமான தீவிரவாத அமைப்பை நாம் தாக்கும்போது, அமெரிக்கா, ரஷியா ஆகிய நாடுகளும், பிரான்ஸ், ஜெர்மனி போன்ற ஐரோப்பிய நாடுகளும் நமக்கு ஆதரவாக குரல் கொடுக்கும்.  ஒருபுறம் சார்க் அமைப்பிலிருந்து தனிமைப்படுத்தப்படும் பாகிஸ்தான் மற்றொருபுறம் வல்லரசுகளாலும் புறக்கணிக்கப்படும்போது, தனது அணு ஆயுத தாக்குதலை ரத்து செதுவிடும்.

பிரதமர் நரேந்திர மோடியின் கண்ணசைவிற்காக காத்து நிற்கும் நமது வீரர்கள் பாரத அன்னைக்கு வெற்றியை காணிக்கை ஆக்குவர் என்ற எதிர்பார்ப்பில்  நாட்டின் ஒவ்வொரு குடிமகனும் உறங்காமல் காத்திருக்கின்றான்.  வெற்றி நிச்சயம்