உமிழ்நீர் அமிர்தம்

சிறு குழந்தைகளை உணவு உண்ணும் பொழுது சற்று கவனித்து பாருங்கள் அவை ஒரு கவளம் உணவை எவ்வளவு நேரம் வாயில் வைத்திருந்து நன்றாக மென்று உண்கின்றன என்று! அவைகள் அப்படி உண்பதால் மிக சிறிய அளவு உண்டாலும் எவ்வளவு சுறுசுறுப்பாக விளையாடுகின்றன, அந்த சக்தி அவைகளுக்கு எங்கிருந்து கிடைத்தது?

குழந்தைகள் உணவை நன்றாக மென்று விழுங்குவதால் அந்த சிறு உணவும் நன்றாக சீரணம் செயப்பட்டு அந்த உணவின் சக்தி முழுவதும் அந்த குழந்தைகளுக்கு சிறிதும் வீணாகாமல் கிடைக்கின்றது. நாம் அவசர அவசரமாக சாம்பார், ரசம், மோர், கூட்டு, பொரியல் அப்பளம் என ஒரு முழு சாப்பாடு சாப்பிட்டாலும் அந்த சக்தி நமக்கு கிடைப்பதில்லை அவை அனைத்தும் மலமாகதான் வெளியேறுகிறது.

குழந்தைகள் சரியாகவே செயல்படுகின்றன ஆனால் அவைகளுக்கு உணவு ஊட்டும் தாமார்கள், சனியனே முழுங்கி தொலையேன், அப்படியே வாயிலேயே வெச்சிகிட்டு இருக்கியே, எனக்கு நிறைய வேலைகள் இருக்கு, சீக்கிரம் சாப்பிடு, இந்தா தண்ணியை குடி…” என பாவம் அந்த குழந்தையை மிரட்டி, குழப்பி அதன் சரியான உணவு பழக்கத்தையும் தனக்கு ஏற்றார்போல மாற்றி விடுகின்றனர்.

அதேபோல என் குழந்தை சரியாகவே சாப்பிட மாட்டான் என பல தாமார்களும் அங்கலாப்பதை பார்த்திருப்போம். ஆனால் அவ்வளவு குறைவாக சாப்பிட்ட அந்த குழந்தை எப்படி அவ்வளவு சுறுசுறுப்பாக ஓடி ஆடி விளையாடுகிறது, அதிகமாக உண்ணும் நம்மால் அதற்கு ஈடு கொடுக்க முடிவதில்லையே, அந்த சக்தி அதற்கு எங்கிருந்து வந்தது?

நாமும் சரியான முறையில் உணவை நன்கு ரசித்து, சுவைத்து அரைத்து உண்டால் நாம் தற்போது உண்ணும் உணவின் அளவு மூன்றில் ஒரு பங்காக குறைந்து விடும், அவை அனைத்தும் சக்தியாக மாற்றப்படுவதால் நல்ல சுறுசுறுப்பு கிடைக்கும், தினமும் அஜீரணத்திற்கும் மலசிக்கலுக்கும் மருந்து தேடாமல் ஆரோக்கியமாக வாழலாம்.

அஜீரணமும் மலசிக்கலும் தான் நம்முடைய பல்வேறு நோகளுக்கும் மூல காரணமாக அமைகிறது என்றால் அது மிகை இல்லை.

மகாத்மா காந்தி தன் சுயசரிதையில் தான் ஒரு முறை அதிகப்படியான உணவு உண்டதையும் அதனால் ஏற்பட்ட அஜீரணத்திற்காக ஜீரண மருந்துகளை எடுத்துக்கொண்டதையும் கூறி, அன்று எனக்கு அந்த மருந்து தரப்படாமல் இருந்தால் அந்த அவஸ்தையில் இருந்து ஒரு பாடம் கிடைத்திருக்கும், மறுபடியும் அந்த தவறு நடந்திருக்காது என்று மக்களும் தற்கால மருத்துவர்களும் செயும் தவறினை சுட்டிகாட்டியிருப்பார்.

சரியாக மென்று உண்ணப்படாத உணவும் தேவைக்கு அதிகமான உணவு நம் உடலுக்கு மிகுந்த தீமை செயும், உடலின் உண்மையான தேவைக்கு ஏற்ப உணவு எடுத்துக்கொள்வதும்  அதனை சரியான முறையில் உண்பதும் நம் உடலின் ஆற்றலை ஊக்குவிக்கும்.

‘உணவை குடி, நீரை உண்‘ எனும் பொன்மொழிக்கு ஏற்ப உணவை வாயினால் நன்கு மென்று உமிழ்நீருடன் கலந்து அரைத்து உண்டும் குடிநீரை சிறுக சிறுக உமிழ்நீருடன் கலந்து குடித்து வந்தாலும் நமக்கு ஜீரண கோளாறுகள் ஏற்பட வாப்பே இல்லை.

உமிழ்நீர் என்பது நம் உடலையும் வாபகுதியையும் குளிர்விப்பது, நாம் உண்ணும் உணவின் செரிமானத்திற்கு உதவுவது, உணவில் உள்ள கெட்ட கிருமிகளை அழிப்பதது போன்ற பல்வேறு முக்கிய பணிகளை செகிறது. நம் உடலில் உள்ள வெள்ளை அணுக்களுக்கு ஒப்பான பணியை செயும் இது ஒரு அமிர்தம்.

உமிழ்நீர் நாம் வாயை மூடிவைத்து உண்ணும்பொழுது அதிகமாக சுரக்கும் இயல்புடையது. இதன் முக்கியத்துவத்தை உணராமல் வாயினை திறந்து வைத்து உண்பதும், அவ்வப்பொழுது எச்சில் துப்புவதும் நம் ஆரோக்கியத்தை நாமே கெடுத்துக்கொள்ளும் செயலாகும்.                               (இனி)