உண்ணா நோன்பே உயரிய மருந்து

நம் உடலில் உள்ள உயிர் ஆற்றல் பல்வேறு வழிகளில் நம்மால் வீணடிக்கப்படுகிறது, அதை காக்கவும், நம் உடலில் அதிகப்படியாக தேங்கியுள்ள கழிவுகளை அகற்றி உயிராற்றலை பெருக்கி உடல் மற்றும் மன ஆரோக்கியத்துடன் நாம் உயிர் வாழும் காலத்தை நீட்டிக்கவும், உயிராற்றலை பெருக்கவும் உள்ள பல்வேறு வழிமுறைகளில் உண்ணாவிரதம் ஒரு மிகசிறந்த உபாயம்.

நாம் சாப்பிடுவதை நிறுத்திய உடன் உயிர் ஆற்றல் நம் உடலில் உள்ள கழிவுகளை சிறுநீரகம், தோல், மலக்குடல், மூக்கு போன்ற உறுப்புகளின் வழியே வெளியேற்றுகிறது. தொடர் உண்ணாவிரதம் ஆரம்பித்து 21 நாட்கள் கழித்தும் நாம் உண்ட ரசாயன மருந்துகளை நம் உடல் சிறுநீர் வழியாக வெளியேற்றுவதை ஒரு ஆவு நிரூபித்துள்ளது.

அனைவரும் 15 நாட்களுக்கு ஒருமுறையாவது உண்ணாவிரதம் கடைபிடித்தால் அதன் மகத்துவத்தை அறியலாம்.

உண்ணாவிரதத்திற்கு என சில நெறிமுறைகள் உண்டு அதன்படி உண்ணாவிரதம் இருந்தால்தான் நாம் அதன் முழுபலனையும் பெற முடியும். இங்கு ஒரு நாள் என்பதை சாதாரணமாக நாம் அனைவரும் கடைபிடிக்கும் காலை முதல் மாலை வரை உணவை தவிர்த்தல் என்பதை ஒட்டியே சோல்லப்பட்டுள்ளது. ஆயினும், நம் ஹிந்து தர்மத்தில் ஒரு நாள் என்பது காலை சூரிய உதயத்தில் ஆரம்பித்து மறுநாள் காலை சூரிய உதயம் வரை என்பதுதான், இங்கு இதை நாம் நினைவில் கொள்வது நல்லது.

உண்ணாவிரதம் என்பதில் உலர் உண்ணா நோன்பு, நீர் உன்ணா நோன்பு, சாறு உண்ணா நோன்பு என சில வகைகள் உண்டு. மேலும் இது ஒரு நாள், 3 நாட்கள், 7 நாட்கள், 11 நாட்கள், 21 நாட்கள் எனவும் வகைப்படுத்தபட்டுள்ளன.

உலர் உண்ணா நோன்பு: காற்றை மட்டுமே சுவாசித்து நீர் கூட அருந்தாமல் ஒரு நாள் முதல் 3 நாட்கள் வரை நோன்பிருத்தல் (அதிகபட்சமாக 3 நாட்களுக்கு மேல் இருந்தால் இது உயிருக்கே ஆபத்தாககூட முடியும்).

நீர் உண்ணா நோன்பு: நீரை மட்டுமே அருந்தி ஒரு நாள் முதல் 7 நாட்கள் வரை நோன்பிருத்தல்.

சாறு உண்ணா நோன்பு: எலுமிச்சை, சாத்துக்குடி, ஆரஞ்சு, பைனாப்பில் சாறுகளை தேவைபட்டால் சுவைக்கு சிறிது தேன் கலந்து குடித்து ஒரு நாள் முதல் தேவைபட்ட நாட்கள் நோன்பிருத்தல்.

ஒரு நாள் உண்ணாவிரதம் இருப்பவர்கள் விரதத்திற்கு முன் இரவு பழங்களை உண்டு, மறுநாள் காலை அகிம்சா எனிமா எடுத்து மலக்குடலின் கழிவுகளை முற்றிலும் நீக்கி, உண்ணாநோன்பை ஆரம்பித்தல்.

உண்ணாவிரத காலத்தில் அதிக உடல் உழைப்பு பேச்சு, அலைபேசி, தொலைகாட்சி உட்பட அனைத்தையும் நிறுத்தி உடலுக்கும் மனதிற்கும் முழு ஓவளிக்க வேண்டியது அவசியம்.

சரி, உண்ணா நோன்பை ஆரம்பித்து விட்டோம், அதை எப்படி முடிப்பது, அதற்கு ஏதேனும் வழிமுறைகள் உண்டா என்றால் ஆம், கண்டிப்பாக உண்டு. உண்ணாவிரதத்தை ஆரம்பிப்பதைவிட அதை முடிக்க மிகுந்த எச்சரிக்கை, பொறுமை தேவை. இல்லை எனில், நாம் உண்ணாவிரதம் இருந்ததற்கான பலன் நமக்கு கிடைக்காமல் வீணாகிவிடும். அந்த முக்கியமான எளிய வழிமுறைகள்.

(இனி)