இந்திய வரலாறை நம்பாத சயீப் அலி கா – பா.ஜ., – எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி

‘வரலாறை நம்ப மாட்டேன் எனக் கூறிய நடிகர் சயீப் அலி கான், தன் மகனுக்கு, தைமூர் என பெயர் வைத்தது ஏன்?” என, பா.ஜ., – எம்.பி., மீனாக் ஷி லேகி கேள்வி எழுப்பியுள்ளார்.

எதிர்ப்பு

பாலிவுட் நடிகர் சயீப் அலி கான், தன்ஹாஜி என்ற வரலாற்று படத்தில் நடித்துள்ளார். மஹாராஷ்டிராவில் வசித்த, 17ம் நுாற்றாண்டை சேர்ந்த போர் வீரனை பற்றிய கதை இது. இந்த படம், சமீபத்தில் வெளியானது.

இது குறித்த விளம்பர நிகழ்ச்சியில் பேசிய சயீப் அலி கான், ‘தன்ஹாஜி பற்றிய விஷயத்தை வரலாறாக நான் கருதவில்லை. ‘இந்தியா என்ற கருத்தாக்கமே, பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் வந்ததற்கு பின் தோன்றியது தான்’ என கூறியிருந்தார். இதற்கு, பல்வேறு தரப்பினரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில், பா.ஜ., வைச் சேர்ந்தவரும், எம்.பி.,யுமான மீனாக் ஷி லேகி, துருக்கியை சேர்ந்தவர்கள் கூட, தைமூரை, கொடுங்கோல் அரசன் என்கின்றனர். ஆனால், வரலாறை நம்பாதவர்கள், தன் மகனுக்கு தைமூர் என பெயர் சூட்டியது ஆச்சரியம் அளிக்கிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

துருக்கியை சேர்ந்த தைமூர் என்ற அரசன், 17ம் நுாற்றாண்டைச் சேர்ந்தவன். இந்தியா மீது படையெடுத்து, டில்லியை கைப்பற்றினான்.

கொடுங்கோல் ஆட்சி

அப்போது, பஞ்சாப் உள்ளிட்ட பகுதிகளில் வசித்த ஆயிரக்கணக்கான மக்களின் தலைகளை வெட்டி வீழ்த்தி, கொடுங்கோல் ஆட்சி புரிந்ததாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த விவகாரத்தைத் தான், மீனாக் ஷி லேகி, மறைமுகமாக சுட்டிக் காட்டியுள்ளார்.