குடியரசு தின விழாவில் ஏற்ற தேசியக் கொடி தயார்

குடியரசு தினத்தன்று, தமிழக அரசு சார்பில் நடக்கும் விழாவில் ஏற்று வதற்காக, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற பிரமாண்ட தேசியக் கொடி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து, சென்னை காதி கிராமோத்யோக் பவனுக்கு வரவழைக்கப்பட்டு உள்ளது.தனி அளவுநாட்டின், 71வது குடியரசு தினம், வரும், 26ல், கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம், தமிழக அரசு சார்பில், சென்னை மெரினாவில், குடியரசு தினவிழா கொண்டாடப்பட உள்ளது. கவர்னர் பன்வாரிலால் புரோஹித், அங்கு அமைக்கப்படும் கம்பத்தில், கொடியேற்ற உள்ளார்.இதற்காக, மஹாராஷ்டிராவில் தயாரிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற தேசியக் கொடி, சென்னை காதி கிராமோத்யோக் பவனுக்கு வந்துள்ளது. தேசியக் கொடி தயாரிப்பு குறித்து, காதி கிராமோத்யோக் பவன் மேலாளர் செல்வராஜ் கூறியதாவது:மத்திய, மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில், காதியில் தயாரிக்கப்பட்ட, ஐ.எஸ்.ஐ., சான்று பெற்ற, தேசியக் கொடிகளை தான் ஏற்ற வேண்டும்.தேசியக் கொடிகளை, மஹாராஷ்டிரா மாநிலம், நான்டெக், மரத்துவாடாவில் உள்ள, மத்திய அரசின் காதி நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. தேசியக் கொடி, நான்கு இழைகளால் தயாரிக்கப்படுவதால், மழை, வெயில் காலத்திலும் பாதிக்காது; கிழியாது. தேசிய கொடிக்கு என, தனி அளவுகள் உள்ளன. ஐ.எஸ்.ஐ., சான்றிதழும் பெற வேண்டும்.கதர் வாரியம் வாயிலாகவே விற்பனை செய்ய வேண்டும்.தள்ளுபடிலாப நோக்கம் இன்றியும், தள்ளுபடி சலுகை இன்றியும் விற்பனை செய்ய வேண்டும். அந்த விதிகளுக்கு உட்பட்டு, சென்னையில் உள்ள காதி கிராமோத்யோக் பவன் வாயிலாக, தேசியக் கொடி விற்பனை செய்யப்படுகிறது.

அரசு சார்பில் நடத்தப்படும், விழாவிற்கான கொடி முதல், அனைத்து மத்திய, மாநில அரசு அலுவலகங்களும், நிறுவனங்களும், காதி நிறுவனத்தில், துறை வாரியாக கடிதம் கொடுத்து, தேசியக் கொடியை பெறுகின்றன. பொதுமக்களுக்கும் விற்கப்படுகின்றன.இவ்வாறு, அவர் கூறினார்.விலை எப்படி?தேசிய கொடியின் அளவு விலை ரூபாயில்8×12 அடி 6,6636×9 அடி 4,482 ரூபாய்;4×6 அடி 1,7013×4.5 அடி 1,2152×3 அடி 616இந்த அளவுகளில் மட்டும் தான் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. மேலும், முதல்வர், கவர்னர், அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கார்களுக்கான தேசிய கொடி, 6×9 அங்குல அளவில் தயாரிக்கப் படுகிறது. அதன் விலை, 92 ரூபாய்.விலை!தேசிய கொடியின் அளவு விலை (ரூபாயில்)8×12 அடி 6,6636×9 அடி 4,4824×6 அடி 1,7013×4.5 அடி 1,2152×3 அடி 616இந்த அளவுகளில் மட்டும் தான் தேசியக்கொடி தயாரிக்கப்படுகிறது. மேலும், முதல்வர், கவர்னர், அரசின் முக்கிய பொறுப்பில் உள்ளவர்களின் கார்களுக்கான தேசிய கொடி, 6×9 அங்குல அளவில் தயாரிக்கப்படுகிறது. அதன் விலை, 92 ரூபாய்.