இந்தியை இரண்டாவது மொழியாக தான் கற்க கூறினேன்-அமித்ஷா

இந்தி தினத்தை ஒட்டி கடந்த சில நாட்களுக்கு முன்பு உள்துறை அமைச்சர் அமித்ஷா சில கருத்துகளை தெரிவித்து இருந்தார் அதாவது இந்தியாவில் பொதுவான இணைப்பு மொழியாக இந்தி இருக்க வேண்டும் என்றார் இந்த கருத்துக்கு இந்தி பேசாத மாநிலங்களில் ஏதோ இந்திக்கு எதிர்ப்பு இருப்பது போல ஒரு மாயையை தோற்றுவித்தனர் அரசியல் கட்சி தலைவர்கள். குறிப்பாக தமிழகம் கர்நாடகா கேரளா உள்ளிட்ட தென் மாநிலத்தை சேர்ந்த அரசியல் கட்சிகள் இந்திக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஏதேதோ பேசினார்கள். இந்நிலையில் தமது கருத்து குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷா விளக்கமளித்தார். அதாவது பிராந்திய மொழிக்கு பதிலாக  இந்தியை திணிக்க வேண்டும் என்று நான் ஒருபோதும் தெரிவிக்கவில்லை இங்கே இரண்டாவது மொழியாக இந்தியை கற்றுக் கொள்ளுங்கள். மேலும் குழப்பத்தை தீர்க்க எனது பேச்சை முழுமையாக கேளுங்கள் அத்துமீறி இதனை வைத்து அரசியல் செய்யும் போது அதனை தாராளமாக செய்யலாம் என அமித்ஷா கூறினார்.

இதனைத்தொடர்ந்து இந்திக்கு எதிர்பார்ப்பு இருப்பது போல ஒரு மாயையை தோற்றுவித்த தென் மாநில அரசியல் கட்சித் தலைவர்கள் குறிப்பாக தமிழகத்தை சேர்ந்த ஸ்டாலின் அவர்கள் இந்திக்கு இந்தித் திணிப்புக்கு ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாக தெரிவித்திருந்தார் அமித்ஷா விளக்கமளித்தை அடுத்து மு.க.ஸ்டாலின் இந்தி மொழி குறித்து உள்துறை அமைச்சர்அமித்ஷா விளக்கமளித்துள்ளார் எனவே திமுக இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை ஒத்தி வைத்துள்ளோம் என்று அறிவித்தார்