‘இந்தியாவை தொந்தரவு செய்தால் நிம்மதியாக வாழ விடமாட்டோம்’

கர்நாடக மாநிலம், மங்களூருவில் நடந்த பேரணி ஒன்றில் பங்கேற்ற மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், இந்தியாவை தொந்தரவு செய்பவர்களை, நிம்மதியாக வாழ விடமாட்டோம் என, பாகிஸ்தானை எச்சரிக்கும் வகையில் பேசியுள்ளார்.

இது குறித்து,

நாம், தேவையில்லாமல் யாரையும் சீண்ட மாட்டோம்; நம்மை யாராவது தொந்தரவு செய்தால், அவர்களை நிம்மதியாக வாழ விடமாட்டோம்.கடந்த, 90 களின் பிற்பகுதியில்,காஷ்மீர் பள்ளத்தாக்கில் இருந்து, ஏராளமான பண்டிட்கள் வெளியேறினர். இப்போது, மத்திய அரசு, ஜம்மு – காஷ்மீருக்கு வழங்கிய சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்துள்ளதால், அவர்கள், காஷ்மீரிலிருக்கும் தங்கள் வீடுகளுக்கு திரும்புகின்றனர்; அவர்களை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது.

குடியுரிமை திருத்தச் சட்டம் என்பது, மத ரீதியான துன்புறுத்தல்களால் திக்கப்பட்டவர்களுக்கு, நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கை. இந்துக்கள், சீக்கியர்கள், நம் அண்டை நாடுகளில், சிறுபான்மையினராக இருந்து, இந்தியாவுக்கு வந்தால், அவர்களுக்கு குடியுரிமை வழங்குமாறு, நேருவிடம் மஹாத்மா காந்தி கூறினார்; அவரது கருத்தை, இந்த சட்டத்தின் மூலம் பிரதமர் நரேந்திர மோடி நிறைவேற்றியுள்ளார்.இது, மத்திய அரசு நிறைவேற்றிய சட்டம் என்பதால், அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.