ஆரோக்கியமே முக்கியம்

கிரியா யோகா மூலம் இனிய வெற்றிகரவாழ்வு தொடர்பாக ஆன்மிக சொற்பொழிவு மற்றும் யோகதா சத்சங் சொஸைடி ஆஃப் இந்தியா சார்பில் புத்தக வெளியீட்டு நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் யோகதா சத்சங்க சொஸைடி ஆஃப் இந்தியா மூத்த சன்னியாசி சுவாமி சுத்தானந்த கிரி, நடிகர் ரஜினிகாந்த், சுவாமி பவித்ரானந்த கிரி, இயக்குநர் சந்திரசேகர் உள்ளிட்ட திரையுல பிரபலங்கள், ஆன்மிகவாதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். நிகழ்ச்சியில் யோகதா சத்சங்கத்தின் வரலாறு, கிரியா யோகாவின் சிறப்புகள் குறித்து சுத்தானந்த கிரி, பவித்ரானந்தா கிரி ஆகியோர் உரையாற்றினர். பிறகு பேசிய ரஜினிகாந்த், ‘உடல் ஆரோக்கியம், அறிவு, மனம் ஒருநிலைப்படுத்துவதுதான் மனிதனுக்கு முக்கியம். இதற்கு நல்ல உணவுகளை உண்டு, நல்ல தியானமும் செய்து, நல்ல புத்தகங்களையும் படிக்க வேண்டும். இந்த உலகத்தை விட்டு செல்லும்போது சொத்துகளை சேர்த்து வைத்து செல்வதை விட, நோயாளியாக இல்லாமல் செல்வது மிகமுக்கியம். நாம் நோயாளியாக இருந்தால் பிறருக்கு கஷ்டம் ஏற்படும். எனவே, உடல் ஆரோக்கியம் ஒருவருக்கு மிகவும் அவசியம். மனித மனம் கடந்த கலத்திலோ அல்லது எதிர் காலத்திலோ மட்டுமே என்றுமே இருக்கிறது. அந்த வலிதான் அமைதியின்மைக்கு காரணம். நிகழ்காலத்தில் அது இருப்பதில்லை. அனைவரும் ஆரோக்கியமாக வாழ வேண்டும்’ என பேசினார்.