அரபு நாட்டில் ஹிந்து கோவில்

ஐக்கிய அரபு எமிரேட்ஸின் அபுதாபியில் சுவாமி நாராயண் மந்திர் கட்ட அந்நாட்டு அரசு அனுமதியளித்தது. இதையடுத்து அந்த கோயிலின் வடிவமைப்பு தற்போது வெளியாகியுள்ளது. கோயிலின் அடித்தளம் கட்டும் வேலைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

மற்றொரு முஸ்லிம் நாடான இந்தோனேஷியாவின் பணத்தில் ஹிந்து கடவுள் படம் இருப்பது அனைவரும் அறிந்ததே. அங்கு கடந்த வருடம் 120 மீட்டர் உயரமுள்ள கருட விஷ்ணு சிலை திறக்கப்பட்டது. 1100 வருட பழமையான உலகின் பெரிய விஷ்ணு கோயிலுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது. சமீபத்தில் ‘குஸ்தி பாகூஸ் சுக்ரீவா ஸ்டேட் யுனிவர்சிட்டி’ என்ற பெயரில் ஹிந்து தர்ம பல்கலைக் கழகம் ஒன்றை அமைக்க இந்தோனேஷிய அரசு முடிவெடுத்துள்ளது.