அதிரடியான மதமாற்றத் தடைச்சட்டம்

இந்த மாத கடைசியில் மத்தியபிரதேச அரசு கொண்டுவர உத்தேசித்துள்ள மதமாற்றத் தடுப்பு சட்டம் பள்ளி, கல்லூரி, மதரசா, சர்ச் உள்ளிட்டவைகளுக்கும் விரிவுபடுத்தப்படும். அங்கு மதமாற்றம் செய்யப்படுவது உறுதியானால் அவர்களுக்கு தரப்படும் அனைத்து அரசு உதவிகளும் நிறுத்தப்படும். சட்ட நடவடிக்கை பாயும். பெண் குழந்தைகளை காப்போம் திட்டத்தின் ஒருங்கிணைந்த பகுதியாக இந்த சட்டம் இருக்கும். லவ்ஜிகாத் உள்ளிட்ட கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுவோருக்கு 10 வருட சிறை தண்டனையும் ரூபாய் ஒரு லட்சம் அபராதமும் விதிக்கப்படும் போன்ற பல முக்கிய ஷரத்துகள் இடம் பெறும் என சொல்லப்படுகிறது.