யாருக்கு சகாயம்?

கடந்த இரு தினங்களாக அரசியல்வாதிகளால் விவாதிக்கப்படும் ஒன்று, சகாயம் ஐ.ஏ.எஸ் விருப்ப ஓய்வு பெறுகிறார் என்பதும், அவர் அரசியலுக்கு வந்தால் எந்த கட்சியில் இணைவார் என்பதும்தான். இதை குறித்து திமுக, அதிமுகவே அதிகம் கவலைப்படுவதாக தோன்றுகிறது. கிரானைட் ஊழலை வெளிக்கொண்டு வந்த பின்பு அவர் மக்களின் பேசும் பொருளானார். மக்கள் பாதை அமைப்பை அவர் தொடங்கியதால் அரசியலுக்கு வருவார் என கணிக்கப்பட்டார். அறிவியல் மையத்தலைவர் உள்ளிட்ட பொறுப்புகளில், கடந்த சில ஆண்டுகளாக அவரை அதிகாரமற்றே வைத்திருக்கிறது தமிழக அரசு.

இந்நிலையில் அவர் அரசியலுக்கு வந்தால், ‘லஞ்சம் தவிர் நெஞ்சம் நிமிர்’ என்ற அவரின் பேச்சு, அவர் திமுக, அதிமுகவுக்கு செல்லும் வாய்ப்பிலை என்றே காட்டுகிறது. ரஜினியும் கட்சி ஆரம்பிப்பதாக தெரியவில்லை. தனியாக கட்சி ஆரம்பித்தால் போணியாக முடியாது. காங்கிரஸ், உதிரி கட்சிகள் எடுபடாது என்பதை எல்லாம் அவர் கணக்கிட்டே இருப்பார். எனவே அவர் கூறும் நேர்மை, லஞ்சம் தவிர் என்பதில் அவர் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அவர் தேர்ந்தெடுக்கும் கட்சி பாஜகவாக மட்டுமே இருக்க முடியும்.

ஊழலற்ற ஆட்சி, துணிவு, நேர்மை, அனைத்து சமுதாய மக்களையும், மாற்று மதத்தினரையும் அரவணைப்பது, உயர் பதவிகளில் அமர வைப்பது, திறமை இருப்பவர்களுக்கு முன்னுரிமை, வெளிப்படை நிர்வாகம் என அனைத்திலும் முன்னுதாரணமாக இருக்கும் ஒரே கட்சி இன்றைக்கு பாஜக மட்டுமே. அவர் பாஜகவுக்கு வந்தால் தமிழக பாஜகவின் பலம் சற்றே கூடும் என்பதால்தான் திராவிட கட்சிகள் இவ்வளவு பதறுகின்றனவோ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *