இந்தியாவில் இரண்டாம் தானியார் ரயில் தொடக்கம்

நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னௌ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு வழங்குவதைப்போல, இரண்டாவதாக இயக்கப்பட உள்ள ஆமதாபாத்- மும்பை தேஜஸ் ரயிலிலும் பயணிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும்.

இந்த தேஜஸ் ரயிலின் முதல் வணிக ஓட்டம் ஜனவரி 19-ஆம் தேதி தொடங்குகிறது. இந்த ரயில் ஆமதாபாத்-மும்பை-ஆமதாபாத் வழித்தடத்தில் வியாழக்கிழமை தவிர 6 நாள்களுக்கு இயக்கப்படும். பராமரிப்புப் பணிகளுக்காக வியாழக்கிழமை மட்டும் இயக்கப்படாது.

பயணிகளுக்கு சொகுசு வசதிகளுடன் உள்ளூா் மற்றும் பிராந்திய சுவையிலான உணவு வகைகளும் வழங்கப்படும்.

இந்த ரயில் ஒரு மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் ரூ.100-ம், 2 மணி நேரத்துக்கு மேல் தாமதமானால் ரூ.250 வீதம் ஐஆா்சிடிசி ஒவ்வொரு பயணிக்கும் இழப்பீடு அளிக்கும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *