மதுரை சுப்பலட்சுமி லட்சுமிபதி அறிவியல் கல்லுாரியில் உள்தர மதிப்பீட்டுக் குழு சார்பில் ‘ஊடகவியல் துறையில் கல்வியின் பங்களிப்பு மற்றும் நன்மை தீமைகள்’ என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரித் தலைவர் டாக்டர் ஆர். லட்சுமிபதி இதற்குத் தலைமை வகித்தார். இதில் பங்கேற்று பேசிய ஆர்.எஸ்.எஸ் அகில பாரத ஊடக உறவுத் துறை தலைவர் சுனில் அம்பேத்கர், “இன்றைய கல்வியின் நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் ஆன்லைன் கல்வி பயன்பாடு அதிகரித்துள்ளது. மாணவர்கள் வரலாற்றை தெரிந்துகொள்ளவும், படிக்கும் பாடங்களைத் தாண்டி தெரிந்துகொள்ளவும் ஊடகம் சிறந்த கருவியாக பயன்படுகிறது. கல்வியின் வளர்ச்சிக்கு உறுதுணையாக ஊடகத்துறை உள்ளது” என்றார்.