ஹிஜாப் அடக்குமுறையின் சின்னம்

கர்நாடகத்தில் ஹிஜாப் பிரச்சனையை வைத்து தேசமெங்கும் கலவரம் நடத்த பிரிவினைவாதிகள் முயன்று வருகின்றனர். இதன் ஆழத்தை அறியாமலேயே சில பெண்களும் இதில் சிக்கிக்கொண்டுள்ளனர். இச்சூழலில், ஈரானின் கட்டாய ஹிஜாப் சட்டத்திற்கு எதிராக போராடியதால் நாடு கடத்தப்பட்டு தற்போது அமெரிக்காவில் வசித்துவரும் ஈரானிய ஹிஜாப் எதிர்ப்புப் போராளியும் பத்திரிகையாளருமான மசிஹ் அலினெஜாட் கூறிய கருத்துகள் தற்போது பொருத்தமாக உள்ளது. இவர், சர்வதேச பெண் அரசியல்வாதிகளை ஹிஜாப் அணிவதற்கு எதிராக அணி திரள தொடர்ந்து கோரி வருகிறார். சில ஐரோப்பிய பெண் அரசியல்வாதிகள் ஹிஜாபை ஆதரிப்பதையும், பலர் நமக்கேன் வம்பு என ஒதுங்கிவிடுவதையும் கண்டித்துள்ளார்.

அடிப்படைவாத முஸ்லிம் சமூகங்கள் ஷரியா சட்டத்தை திணித்து முஸ்லீம் பெண்களை அடிமையாக்கி வைத்துள்ளன. உண்மையில் இதில் பெண்களுக்கு விருப்பம் இல்லை.கலாச்சாரம் என்ற பெயரில் ஹிஜாப், புர்கா போன்றவை திணிக்கப்படுகிறது. ஹிஜாப் ஒரு சிறிய பிரச்சினை என்று யார் சொன்னது? சரியான ஹிஜாப் இல்லாத காரணத்தால் ஈரான் அரசு ஒரு வருடத்திற்குள் 3.6 மில்லியன் பெண்களை கைது செய்கிறது, 18,000 பெண்கள் நீதிமன்றத்திற்கு அனுப்பப்படுகின்றனர்., பெண் கார் ஓட்டுநர்கள் சரியானபடி ஹிஜாப் அணியாததால் 40,000  கார்கள் பறிமுதல் செய்யப்படுகின்றன. ஹிஜாப் அடக்குமுறையின் சின்னம் என்றும், இந்தச் சுவரை நாம் ஒட்டுமொத்தமாக நின்று வீழ்த்த வேண்டும்.  உலகெங்கிலும் நாம் இந்த அடிமைத்தனத்தை எதிர்க்க வேண்டும். அடிமைத்தனத்தை யாரும் எதிர்க்கவில்லை என்றால், ஆப்பிரிக்கர்களும் அமெரிக்கர்களும் இன்னமும் அடிமைகளாகவே இருந்திருப்பார்கள். உலகெங்கிலும் உள்ள அனைத்துப் பெண்களும் ஒன்றிணைந்து, கட்டாய ஹிஜாபிற்கு எதிராக ஒரு குரல் எழுப்ப வேண்டும் என விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறார்.