யஸ்வந்த்சின்ஹா வேட்பு மனு தாக்கல்

தற்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த பதவிக்காலம் முடிவடைவதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் வரும் ஜூலை 18ல் தேர்தல் நடக்கவுள்ளது. இதில், பா.ஜ.க கூட்டணி சார்பில், பழங்குடி வகுப்பை சேர்ந்த திரௌதி முர்மு என்ற பழங்குடி வகுப்பை சேர்ந்த பெண் வேட்பாளரை நிறுத்தியுள்ளது. அவர் கடந்த வாரம் மனுத்தாக்கல் செய்தார். இந்நிலையில், எதிர்கட்சி சார்பில் போட்டியிடும் யஸ்வந்த்சின்ஹா நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது அவருடன் காங்கிரஸ் எம்.பி., ராகுல் காந்தி, காங்கிரஸ் மூத்த தலைவர் மல்லிகார்ஜூன் கார்கே, அபிஷேக் சிங் பானர்ஜி,  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் சீத்தாராம் யெச்சூரி, சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ், தேசிய மாநாட்டு கட்சி தலைவர் பரூக் அப்துல்லா, தி.மு.க சார்பில் ராஜா, தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி சார்பில் கே.டி. ராமாராவ், திருணமூல் காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங் பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்டு தேசிய செயலாளர் டி.ராஜா ஆகியோர் சென்றனர். இதனை ஆம்ஆத்மி மற்றும் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியினர் புறக்கணித்தனர். முதல்முறையாக ஒரு பழங்குடியின வேட்பாளர் அதுவும் பெண் வேட்பாளர் குடியரசுத் தலைவராக தேர்ந்தெடுக்கப்படுவதை தி.மு.க, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சியினரும் அவர்களது கூட்டணியில் உள்ள இடதுசாரிகள், விடுதலை சிறுத்தைகள், ம.தி.மு.க உள்ளிட்ட கட்சியினரும் இதன் மூலம் நன்றாக புலனாகிறது. இவர்கள் கூறும் சமூக நீதி, பட்டியலினத்தவர், பழங்குடியினத்தவர் முன்னேற்றம் எல்லாம் வெறும் பேச்சளவில்தான் உள்ளது, செயல்பாட்டில் கிடையாது என்று மக்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.