தேனியில் மத்திய அரசு அமைக்கவுள்ள நியூட்ரினோ ஆய்வகத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு எதிர்ப்பை தெரிவித்துள்ளது. இதுகுறித்து புதிய தமிழகம் கட்சி நிறுவன தலைவர் டாக்டர்.க.கிருஷ்ணசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், ’பகுத்தறிவு பற்றி பேசும் திராவிட ஸ்டாக்கிஸ்டுகள், தமிழகத்தில் நியூட்ரினோ அறிவியல் பகுத்தாய்வு மையம் அமைவதை எதிர்ப்பது ஏன்? படிப்பது ராமாயணம், இடிப்பது பெருமாள் கோயில்” என்பதுபோல, தி.மு.கவினர் ஈ.வே. ராமசாமியைப் பற்றி, விஞ்ஞானத்தைப் பற்றி பேசுகிறார்கள். ஆனால், அறிவியலுக்கு எதிராக செயல்படுகிறார்கள். திமுக அரசு முற்போக்கு பேசினால் மட்டும் போதாது. நடைமுறையில் முற்போக்காகவும் விஞ்ஞான ரீதியாகவும் இருந்திட வேண்டும்’ என கூறியுள்ளார். மேலும், இத்திட்டத்தால் ஏற்படும் பலன்கள், மக்களிடம் இது குறித்து எடுத்துக்கூறி ஐயத்தை தீர்க்க வேண்டிய கடமை, தேச முன்னேற்றம், விஞ்ஞான வளர்ச்சி, அதன் பயன்கள், திட்டத்தின் பாதுகாப்பு, இயற்கைக்கு பாதிப்பு ஏற்படுத்தாத ஆய்வக கட்டமைப்பு, செயல்பாடு, எதிர்கட்சிகளின் குறுகிய எண்ணம், மத்திய அரசின் திட்டங்கள் அனைத்தையும் எதிர்க்கும் திராவிட கட்சிகளின் கயமைத்தனம், வளர்ச்சிக்கு அவர்கள் போடும் முட்டுக்கட்டைகள் ஆகியவற்றையும் விளக்கியுள்ளார்.