கொலுசின் தரம்தான் தி.மு.கவின் தரம்

கோவை மாநகராட்சி பகுதியில், வாக்காளர்களை கவர, தி.மு.க.,வினரும், அ.தி.மு.க.,வினரும் போட்டி போட்டு, பணம், பரிசுப் பொருட்கள் வழங்கியுள்ளனர். இதில், தி.மு.கவினர் கொடுத்த கால் கொலுசு பெண்களை கவர்ந்தது என்னமோ உண்மைதான். ஆனால், அது சுத்தமான வெள்ளி கொலுசுதானா என்ற சந்தேகமும் அந்த பெண்களிடம் எழுந்தது. ஏனெனில் தி.மு.கவின் முந்தைய செயல்பாடுகள் அப்படி. உதாரணமாக, சமீபத்தில் வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பை சொல்லலாம். இந்நிலையில், தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை, ஒரு பிரசார கூட்டத்தில் பேசுகையில், ‘அவர்கள் கொடுத்த கொலுசு தரம் குறைந்தது. அதில் 16 சதவீதமே வெள்ளி கலந்திருக்கிறது’ என பகிரங்கமாக குற்றம் சாட்டினார். இதையடுத்து, வாக்காளர்களுக்கு வழங்கிய, ஒரு செட் கொலுசை, கோவையில் உள்ள தனியார் தரப் பரிசோதனை மையத்தில் ‘தினமலர்’ பத்திரிகை சார்பில் கொடுத்து தர ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. அந்நிறுவனம் வழங்கிய ஆய்வறிக்கையில், ஒரு கொலுசில், வெள்ளி 27.10 சதவீதம், தாமிரம் – 62.15, துத்தநாகம் – 10.75 சதவீதம் இருந்தது. மற்றொரு கொலுசில், வெள்ளி – வெறும் 3.66 சதவீதம், தாமிரம் – 85.14 சதவீதம், துத்தநாகம் – 14.20 சதவீதம் இருந்தது. இதன்மூலம், வாக்காளர்களுக்கு அவர்கள் வழங்கிய கொலுசு வெள்ளி அல்ல. அது வெள்ளி முலாம் பூசப்பட்டது என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.