இறங்கிவரும் வாட்ஸப்

‘வாட்ஸ் ஆப் பயனாளிகளின் தகவல்கள் முக நூல் சமூக வலைதளத்துடன் பகிர்ந்து கொள்ளப்படும்’ என, வாச்ஸப் புதிய தனியுரிமை கொள்கைகள் வெளியிட்டது. இதனைத் தொடர்ந்து மக்கள் அரட்டை, சிக்னல், டெலகிராம் உள்ளிட்டவற்றிற்கு மாறத் துவங்கினர். பாரத அரசும் விளக்கம் கேட்டது. புதிய தனியுரிமை கொள்கையை அமல்படுத்துவதை மே 15 வரை ஒத்திவைத்தது வாட்ஸப். இதனால் தனது புதிய தனியுரிமை கொள்கைகள் குறித்த கூடுதல் தகவல்களை மக்களுக்கு ‘பேனர்’ வழியாக காட்சிப்படுத்தப்பட உள்ளது என  வாட்ஸப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. மேலும், ‘பயனாளிகளின் தனிப்பட்ட உரையாடல் விவரங்கள் பாதுகாக்கப்படும்’ என மத்திய அரசிடம், வாட்ஸப் நிறுவனம் உறுதி அளித்துள்ளது.