அடம்பிடிக்கும் மேற்கத்திய நாடுகள்

உலக மக்கள் ஆரோக்கியமாக இருக்க வேண்டும், நோயில் இருந்து குணமாக வேண்டும் எனும் நல்லெண்ண அடிப்படையில், கொரோனா தடுப்பூசிகள், அது தொடர்பான சிகிச்சைகள் அனைத்திற்கும், அறிவுசார் சொத்துரிமைகளை தற்காலிகமாக தள்ளுபடி செய்யுமாறு பாரதமும் தென்னாப்பிரிக்காவும் உலக வர்த்தக அமைப்பிடம் கோரிக்கை விடுத்தன. ஆனால், மருந்து உற்பத்தி நிறுவனங்களுக்கு ஆதரவாக செயல்படும் அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து போன்ற நாடுகள் இந்த கோரிக்கையை நிராகரித்துள்ளன. மேற்கத்திய நாடுகளின் இந்த முடிவுக்கு அமெரிக்க செனட்டர் பெர்னி சாண்டர்ஸ், ஐ.நா.வின் வர்த்தக மேம்பாட்டு மாநாட்டின் கொள்கை ஒருங்கிணைப்பாளர் கெயிட்டி கல்லோக்லி ஸ்வான் லா போன்றோரும், ஆக்ஸ்பார்ம் தொண்டு நிறுவனமும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.