மோடியின் திட்டத்துக்கு வரவேற்பு

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் நடத்தும் கடற்படை சார்ந்த கூட்டத்தில் கலந்துகொண்ட பாரதப் பிரதமர் மோடி, இதில் கலந்துகொள்ளும் முதல் பாரதப் பிரதமர் என்ற பெயரை பெற்றார். சர்வதேச அளவில் உலக நாட்டு கப்பல் படைகள் ஒற்றுமை, பாதுகாப்பு உள்ளிட்டவை குறித்து இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. அதில் பேசிய மோடி, கடற்பரப்பில் சர்வதேச சட்டங்களை மதித்து செயல்படுவது, இருநாட்டு எல்லைகள் இடையே கப்பல் படை ஒத்துழைப்பு, கப்பல் வாணிபம், கடல் வளங்களை பாதுகாத்தல், கடலில் ஏற்படும் இயற்கை பேரழிவுகளை அனைத்து நாட்டு கப்பற்படைகளும் ஒன்றிணைந்து தடுத்தல் உள்ளிட்ட 4 அம்ச திட்டங்களை எடுத்துரைத்தார். அவரின் இத்திட்டங்கள், ஐ.நா சபையில் அனைவரிடமும் சிறப்பான வரவேற்பினை பெற்றது.