காக்க காக்க தகவலால் காக்க!

ஆந்திரப் பிரதேசத்தின் மென்பொருள் பொறியாளர் சாய் பிரணீத் கடந்த ஆண்டு, அவருடைய பகுதியில் மோசமான பருவநிலை காரணமாக விவசாயிகளுக்குக் கணிசமானபாதிப்பு ஏற்பட்டதை கவனித்திருக்கிறார். வானிலை ஆய்வியலில் இவருக்குப் பல ஆண்டுகளாகவே ஆர்வம் இருந்து வந்திருக்கிறது.

ஆகையால், இவர் தனது ஆர்வம் மற்றும் திறமை, விவசாயிகளின் நலனுக்குப் பயனாக இருக்க வேண்டும் என்று தீர்மானித்தார். இப்பொழுது இவர் தனித்தனி தரவு ஆதாரங்களிடமிருந்து, வானிலைத் தரவுகளை விலைக்கு வாங்கி, இவற்றைப் பகுப்பாய்வு செய்து, உள்ளூர் மொழியில் பல்வேறு வழிகளில் விவசாயிகளிடம் உறுதியான தகவலைக் கொண்டு சேர்க்கிறார். வானிலை புதுப்பிப்புகள் தவிர, பல்வேறு பருவ நிலைகளில் இருப்போர் என்ன செய்ய வேண்டும் என்ற வழிகாட்டுதலையும் பிரணீத் அளிக்கிறார்.

குறிப்பாக, வெள்ளப் பெருக்கிலிருந்து தற்காத்துக் கொள்வது பற்றியும், புயல் அல்லது மின்னல், -இடியால் தாக்கப்படும்போது எப்படி உயிர் தப்புவது என்பது பற்றியும் மக்களுக்குத் தெரிவிக்கிறார்.