வாசிம் ரிஸ்விக்கு அபராதம்

உத்தரபிரதேச ஷியா வக்ஃப் வாரியத்தின் முன்னாள் தலைவர் சையத் வாசிம் ரிஸ்வி, குர்ஆனின் 26 வசனங்கள் அல்லது சூராக்களில் நீக்குவதற்கான வழிகாட்டுதலை நீதிமன்றம் வகுக்க வேண்டும் என்று மனுதாக்கல் செய்திருந்தார். அதில், இந்த வசனங்கள் நாட்டின் இறையாண்மை, ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டிற்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகின்றன. சட்டங்களை மீறுவதாகவும் பயங்கரவாதத்தை ஊக்குவிப்பதாகவும் உள்ளன. பொதுமக்களின் நன்மைக்காக, தேவைப்பட்டால் தனது மனுவின் பொருள் குறித்த கருத்தைப் பெற பொருத்தமான நிபுணர்கள், மத வல்லுநர்களின் குழுவை நியமிக்கலாம் என்று தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி ரோஹிண்டன் பாலிநாரிமன் தலைமையிலான உச்ச நீதிமன்ற அமர்வு, தேவையில்லாமல் அவசியமற்ற மனுவை தாக்கல் செய்ததற்காகவும், உச்ச நீதிமன்றத்தின் விலைமதிப்பற்ற நேரத்தை தவறாக பயன்படுத்தியதற்காகவும் அவருக்கு ரூ. 50,000 அபராதம் விதித்து மனுவை தள்ளுபடி செய்து தீர்ப்பளித்தது.