வாகன பேட்டரி அரசு ஊக்கத்தொகை

‘பாரதத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், காற்று, ஒலி மாசை குறைக்கவும், பெட்ரோல், டீசலால் இயக்கப்படும் வாகனங்களின் எண்ணிக்கையை குறைக்கவும் மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக, வாகன பேட்டரிகள் தயாரிப்புக்கு, உற்பத்தியுடன் இணைந்த ஊக்கத்தொகை திட்டத்தின் கீழ், 18 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்க, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பேட்டரிகளை பயன்படுத்தும் மின்னணு பொருட்கள், மின்சார வாகனங்கள், சூரிய மின் தகடுகள் ஆகியவற்றின் உற்பத்தியும் அதிகரிக்கும்’ என தகவல் மற்றும் ஒளிபரப்பு துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் கூறியுள்ளார்.