வீதிக்கு வந்த வீரமணி வீட்டு உண்மை

ஊரார் குடும்பத்து தாலிகளை பகுத்தறிவுக்கு ஒவ்வாது என்று சொல்லி  அறுக்க சொல்லும் வீரமணி தனது குடும்பத்து பெண்மணிகளிடம் அதனை சொல்லுவதில்லை. அவரது மகன் ‘அன்பு” காதல் மனம் புரிய ,அவரது தந்தை வீரமணி ஒப்புக்கொள்ளவில்லை. எனவே தனது தந்தையின் விருப்பத்திற்கு மாறாக தனது காதலியான மலையாள பெண்ணை மணக்க வீரமணியின் மகனான அன்பு, தியாகராஜனின் உதவியை நாடியுள்ளார். தமிழின தலைவர் மாணமிகு வீரமணி தனது மகன் மணக்க இருக்கும் மணப்பெண்  மலையாள  பெண் என்பதாலும், திராவிடர் கழக தலைவர் பதவிக்கும் தனது குடும்ப சொத்தான திராவிடர் கழக டிரஸ்ட்டுக்கு வாரிசாக வர இருக்கும் தனது குடும்ப உறுப்பினர்  எந்த வித சர்சையிலும்  அடிபட கூடாது என்ற  காரணத்தினாலும்  அதனை எதிர்த்தார் என்று கூறப்படுகிறது.

 தனது விருப்பமான பெண்ணை  திருமணம் செய்ய தந்தையை மீறி புதுச்சேரி  சென்று திருமணம் செய்ய முயன்றார் அன்பு . இந்த திருமணத்துக்கு அந்த மாநில சட்ட திட்டங்கள் ஒத்துவரவில்லை என்பதால் கடலூருக்கு சென்று சிறப்பு சட்டத்தின் கீழ் பதிவு திருமணம் செய்து கொண்டார்.பதிவு திருமணம் செய்ய ஏதாவது ஒரு கோயிலில் வைத்து வைதிக முறையில் பூசாரி முன்னிலையில் திருமணம் செய்திருக்க வேண்டும் என்ற விதிமுறை காரணமாக எந்த பிராமணர்களை  காலம்  முழுவதும் தூசித்துவந்தாரோ அதே பிராமண  புரோகிதரின் முன்னிலையில் வேத மந்திரம் முழங்க விநாயகர்  கோயிலில் வைத்து அவரது அன்பு மகனின் திருமணம் நடந்தேறியுள்ளது.

இந்த செய்தி அரசல் புரசலாக வெளியில் கசிந்த போது அதனை விஜயபாரதத்தில் நாம் செய்தியாக வெளியிட்டிருந்தோம் . அந்த செய்திக்கு மறுப்பு தெரிவித்து அவர் நமக்கு ஒரு வக்கீல் நோட்டீஸ் அனுப்பி இருந்தார். நாமும் அதற்க்கு தகுந்த விளக்கம் கொடுத்து மீண்டும் நமது வழக்கறிஞர் மூலமாக பதில் அனுப்பிய பின்னர் அந்த விவகாரம் கிடப்பில் போடப்பட்டது. அப்போது நாம் வெளியிட்ட செய்தி உண்மையானதுதான் என்பதனை தற்போது பா ஜ கவில் இணைந்துள்ள கராத்தே தியாகராஜன் தனது செய்தியாளர் சந்திப்பில் மனம் திறந்துள்ளார் . பொதுவாக தமிழக அரசியல்வாதிகள் குறிப்பாக கழக கண்மணிகள் ஊருக்கு மட்டுமே உபதேசம் செய்வதில் வல்லவர்கள். அதற்க்கு திராவிடர் கழகமும் விதிவிலக்கல்ல  என்பதை கராத்தே தியாகராஜனின் அதிரடி பேட்டி உறுதிபடுத்தியுள்ளது.