பேசின் பிரிட்ஜில் வந்தே பாரத் பராமரிப்பு

பேசின் பிரிட்ஜ் ரயில் பெட்டிகள் பராமரிப்பு டிப்போவில், வந்தே பாரத் ரயில்களை பராமரிப்பதற்காக ரூ.19 கோடி மதிப்பீட்டில் ஆறு ரேக் வசதியுடன் பிரத்யேக பிட் லைன்களை அமைக்கும் பணியை தெற்கு ரயில்வே தொடங்கியுள்ளது. சென்னை பெங்களூரு வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ஆகஸ்ட் 15, 2023க்கு முன் சேவையைத் தொடங்க வாய்ப்புள்ளது. இந்த வழித்தடம் நான்காவது ரயில்கள் இயக்கத்திற்காக பரிசீலிக்கப்பட்டு வருகிறது. சென்னை (ஆறு), கோயம்புத்தூர் (மூன்று), திருச்சி (இரண்டு), மற்றும் திருவனந்தபுரம் (இரண்டு) ஆகிய பிரிவுகளில் பராமரிப்புக்காக 13 ரயில்களுடன் 102 வந்தே பாரத் ரயில்களை தொடங்க ரயில்வே திட்டமிட்டுள்ளது. சென்னையில் உள்ள ஐ.சி.எப் சமீபத்தில் அறிமுகப்படுத்திய மேம்படுத்தப்பட்ட வந்தே பாரத்தின் மூன்றாவது ரயிலின் வெற்றிகரமான சோதனை ஓட்டத்தையடுத்து அது வரும் நவம்பரில் குஜராத்தின் அகமதாபாத் மற்றும் மும்பை இடையே சேவையில் ஈடுபடுத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நான்காவது ரயில் தயாரிப்புப் பணி இறுதி கட்டத்தில் உள்ளது.