தீண்டாமை வேரும் வேரடி மண்ணும் இல்லாமல் ஒழிய

இங்கிலாந்து, ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர் சிட்டி பிரஸ் வெளியிடும் சொல்ல கராதியில் ‘PARIAH’ என்ற சொல்லுக்கு நேராக தாழ்த்தப்பட்டவர், தீண்டத்தகாதவர், ஜாதியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டவர் என்று கூறப்பட்டுள்ளது. இதே போல, வெப்ஸ்டர்ஸ் மரியம் அகராதியிலும் உள்ளது.
பறையர் என்போர் பாரதிய சமுதாயத்தின் ஓர் அங்கம். இந்தச் சொல்லுக்கு இப்படி ஒரு பொருள் கற்பிக்க ஆக்ஸ்ஃபோர்ட் பல்கலைக்கழகத்துக்கு யார் சொன்னது? நம் சகோதரரின் ஜாதி பெயரை இழிவுபடுத்தும் அர்த்தத்தோடு வெளியிடுவது சரியா? என்றைக்கு தீண்டாமை ஒரு பாவம், குற்றம் என்று மனதார பாரத தேசமும், அரசியலமைப்பு சட்டமும் ஏற்றுக்கொண்டதோ அன்றே இந்தச் சொற்களை கவனித்து நீக்கியிருக்க வேண்டாமா?
கருப்பினத்து மக்களை NIGGER என்று அழைக்கும் வழக்கம் வெள்ளையனுக்கு இருந்தது. அதே அகராதியில், இன்று அந்தச் சொல்லைக் குறிப்பிடும்போது, ‘கருப்பினத்து மக்களை சாடி அழைக்கும் சொல், கீழான சொல், சாடும் சொல், இப்படி அழைத்தல் குற்றம் (OFFENCE)’ என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
ஆனால், நம் ஹிந்து சகோதரரின் ஜாதி பெயரை மாற்றாமல், மோசமான அர்த்தம் தொனிக்குமாறு இதுவரை வெளியிட்டு வந்திருக்கிறார்கள். ஆங்கிலத்தில் பேசும்போது இந்த வார்த்தையைச் சொல்லி உவமையிட்டு அழைப்பது இன்றளவில் கூட நடைபெற்று வருகிறது. அந்தச் சொற்கள் எப்போதோ அகராதிக்குள் வந்ததால் ஒவ்வொரு சொல்லுக்கும் இப்போதுள்ளவர்கள் பொறுப்பேற்க வேண்டும் என்று எதிர்பார்க்கவில்லை. ஆனால், அந்தச் சொல்லை மாற்றி எழுத வேண்டும்
.ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் பொறுப்பாளர்களின் மின்னஞ்சல் முகவரிகள் கீழே தரப்பட்டுள்ளன. அத்துடன் பட்டியலினத்தவரின் தேசிய ஆணையத்தைச் சேர்ந்த நிர்வாகிகளின் மின்னஞ்சல் முகவரிகளும் தரப்பட்டுள்
ளன. நமது மின்னஞ்சலின் நகலை அவர்களுக்கு அனுப்பினால் நிச்சயம் ஆவனசெய்வார்கள். அதிக அளவில் அஞ்சல்கள் சென்றால் நடவடிக்கை நிச்சயம். வாசகர்கள், தங்கள் நண்பர்களையும் இப்பணியில் ஈடுபட வைத்து அதிக அதிகமாக கடிதம் அனுப்பி வைக்க வேண்டும். அஞ்சல் ஆங்கிலத்தில் மட்டுமே இருக்க வேண்டும்.

ஆக்ஸ்ஃபோர்ட் யூனிவர்சிட்டி பிரஸ் மின்னஞ்சல்:
paras.bansal@oup.com
fathima.dada@oup.com

தேசிய பட்டியலின ஆணைய நிர்வாகிகள் மின்னஞ்சல்:
chairman-ncsc@nic.in,
kiran.jolly@nic.in,
parveen.75@gov.in,
arun.halder@ncsc.gov.in,
j.psonkar@ncsc.gov.in,
mohit.shukla@ncsc.gov.in,
subhash.pardhi@ncsc.gov.in,
naveen.rohila@ncsc.gov.in,
anju.bala@ncsc.gov.in,
bk.bhola@ncsc.gov.in

– நமது நிருபர்