கிறிஸ்தவ கல்வி நிறுவனங்களில் மறைக்கப்படும் உண்மைகள்

எங்கோ ஒரு மூலையில் ஹிந்துக்கள் நடத்தும் பள்ளியின் பாலியல் பலாத்கார நிகழ்வுகளை வைத்து பட்டிமன்றம் நடத்தும் தமிழக ஊடகங்கள், சிறுபான்மையினர் நடத்தும் கல்வி நிறுவனங்களில் நடப்பதை மூடிமறைத்து அவற்றுக்கு செஞ்சோற்று கடனாற்றி வருகின்றன. முன்பொரு காலத்தில் கிறிஸ்துவர்கள் நடத்தும் கான்வென்ட் பள்ளிகளில் ஆங்கிலம் உள்ளிட்ட பாடங்கள் நன்கு நடத்தப்படும், அதிக மதிப்பெண்கள் பெறும் வகையில் கல்வி போதிக்கப்படும் என்பதால் அங்கு மாணவர்களை சேர்க்கும் மோகம் இருந்தது. இப்போதும் உள்ளது.
ஆனால், அங்கு மாணவர்கள், ஆசிரியர்களுக்கு இழைக்கப்படும் அநீதிகள் (பொட்டு வைக்காதே/பூ சூடாதே), பாலியல் சீண்டல்கள், அத்துமீறல்கள் குறித்து யாரும் வாய் திறப்பதில்லை. திறக்க விடப்படுவதும் இல்லை. உதாரணத்துக்கு சென்னை கே.கே நகர் பள்ளியில் யாரும் புகார் அளிக்காமல் முன்னாள் மாணவியும், மாடல் அழகியுமான ஒருவர் சமூக வலைதளத்தில் பதிவிட்ட உடனே போலீசார் போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து தினமும் விசாரித்து தகவல் தருகின்றனர். திமுக எம்.பி.க்கள், அதன் கூட்டணிக்கட்சிகள் துள்ளிக் குதித்து கருத்து பதிவிடுகின்றனர்.
அதே நேரத்தில் சில மாதங்களுக்கு முன்பு சென்னை அமைந்தகரை கிறிஸ்தவ பள்ளியில் நடைபெற்ற பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லை. விளையாட்டு பயிற்சியாளர் மீது புகார் தரப்பட்டும் வழக்கு பதியப்படவில்லை. மற்ற கல்வி நிறுவனங்களின் பெயரை வரிக்கு வரி எழுதியஊடகங்கள், கிறிஸ்தவ பள்ளி, அமைப்புக ளின் பெயரை வெளியிடுவதில்லை. ஹிந்துஅமைப்புகளின் முயற்சியால் இப்போதுசிறுபான்மையினர் கல்வி நிறுவனங்களின் பாலியல் பலாத்கார புகார்கள் வெளியாகி அம்பலத்துக்கு வருகின்றன.
சென்னையின் அடையாளமாக விளங்கும் லயோலா கல்லூரி மீது தொடர்ந்து அதன் போரசிரியர்கள் பாலியல் தொந்தரவு, அத்துமீறல் புகார்களை கூறி வருகிறார்கள். அக்கல்லூரி இருப்பது நுங்கம்பாக்கம் அகஸ்தீஸ்வரர் கோயிலுக்குச் சொந்தமான இடத்தில். 100 ஆண்டு குத்தகை நடப்பாண்டில் முடிவடைகிறது. மேலும், டெல்லியின் ஜேஎன்யு போல தேசவிரோத சக்திகளின் பிறப்பிடமாக லயோலா கல்லூரி திகழ்கிறது. கடந்த ஆண்டு டிசம்பரில் பாலியல் துன்புறுத்தல் பணிநீக்கப் புகார் காரணமாக முன்னாள் பெண் ஊழியருக்கு கல்லூரி நிர்வாகம்
ரூ.64.3 லட்சம் இழப்பீடு வழங்கதமிழ்நாடு மகளில் ஆணையம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து செய்யப்பட்ட மேல் முறையீட்டு மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.
இப்போது பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான முன்னாள் பெண் பேராசிரியையின் வழக்கு விவகாரத்தில் நீதிமன்ற உத்தரவை உடனே அமல்படுத்த வேண்டும் என்று தேசியமகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இதன் மூலம் கலைத்துறை 2006ம் ஆண்டு விரிவுரையாளராக ஜோசபின் ஜெயசாந்தி சேர்ந்தார். 2009ல் பணி நிரந்தரம் ஆனது. சக பேராசிரியர் எஸ்.ஆண்டனி ராஜராஜன் (மதம் மாறிய கிறிஸ்துவர்) அவருக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். அதிர்ச்சியடைந்த பேராசிரியை, 2012ல் கல்லூரி உள்விசாரணை குழுவிடம் புகார் அளித்தார்.
ஆனால், கல்லூரி நிர்வாகமோ அந்தப் புகார் மீது விசாரணை நடத்தாமல் பேராசிரியை மீதே களங்கம் கற்பித்து பொய்ச் செய்திகளை பரப்பி அவமானப்படுத்தியது. அதையடுத்து, 2013ல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பேராசிரியை வழக்கு தொடர்ந்தார். இருமுறை நீதிமன்றம் உத்தரவிட்டும், முதல் தகவல் அறிக்கை பதியாமல் போலீசார் அலைக்கழித்தனர்.
கல்லூரி நிர்வாகத்தின் அழுத்தம் காரணமாக வழக்கை மூடிமறைக்க போலீசார் முயற்சித்தனர். ஆசிரியைக்கு நிறுத்தி வைக்கப்பட்ட பணப் பலன்களுக்கு இணையாக இழப்பீடு தர நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆண்டனி ராஜன் மீது நடவடிக்கை எடுக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டது. அவர் பணி ஓய்வு பெற்று ஓய்வூதியபலன்களை பெற்றும் விட்டார். ஆனால், பாதிக்கப்பட்ட ஆசிரியையின் அவலம் தொடர்கிறது. “இது சிறுபான்மையினர் நடத்தும் கல்லூரி. எந்த சட்டமும் எங்களை ஒன்றும் செய்யாது” இறுமாப்புடன் லயோலா நிர்வாகம் அவரிடம் கூறி பொய் சாட்சி கூறியவர்களுக்கு தகுதிக்கு மீறி பணி நியமனம், பதவி உயர்வு தந்துள்ளதாக பேராசிரியை ஜோசபின் நம்மிடம் தெரிவித்தார்.
சாட்சிகள் மிரட்டப்பட்டு, பொய் சாட்சி வாங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மீண்டும் நியாயமான குறுக்கீடு இல்லாத விசாரணை நடத்த தேசிய மகளிர் ஆணையத்திடம் செல்ல உள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இதே போன்று, திருச்சியில் உள்ள பிஷப் ஹீபர் கல்லூரியில் தமிழ்த்துறையில் பட்ட மேற்படிப்பு படிக்கும் சில மாணவிகள் தமிழ்த்துறை தலைவராக பணியாற்றும் சந்திரமோகன் மீது பாலியல் குற்றச்சாட்டு கூறி 5 பக்க அளவிலான புகார் மனுவை கல்லூரி முதல்வருக்கு அனுப்பியுள்ளார். ஆனால் நடவடிக்கை இல்லை.
வகுப்பறையில் குறைவான எண்ணிக்கை யில் மாணவிகள் இருந்ததாகவும் தனது அறைக்கு வரும்படி கட்டாயப்படுத்தியதாகவும் மாணவிகள் குற்றம் சுமத்தியுள்ளனர். அதே துறையில் உதவி பேராசிரியராக பணியாற்றும் நளினி, துறை தலைவர் பாலு சந்திரமோகனுக்கு உடந்தையாக இருப்பதாகவும் மாணவிகள் குறிப்பிட்டுள் ளனர். இரு பொருள்பட ஆபாசமாகபேசுவது, நெருங்கி அமர்ந்து சீண்டுவது ஆகியவற்றை செய்ததாகவும் புகாரில் கூறியுள்ளனர்.
இது தொடர்பாக, அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தைச் சேர்ந்த மாணவிகள் தொடர் போராட்டத்துக்குப் பிறகு போலீசார் வழக்குப் பதிந்து அவரை கைது செய்தனர். வழக்கை மூடி மறைக்க பல முயற்சிகளை போலீசார் உதவியுடன் கல்லூரி நிர்வாகம் எடுத்தது. இப்போது சந்திரமோகன், நளினி சுந்தரி இருவரும் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
கேரளத்தில் கன்னியாஸ்திரிகள் பலாத்காரம், அபாயா கொலை மறைப்பு என பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தேவாலய வளாகத்தில் அதிகரித்து வருவதன் மூலம் பாதிரியார் பணி என்பது குற்றச் செயல்களுக்கான அங்கீகாரம், உரிமம் ஆக மாறிவிட்டதா என நினைக்க தோன்றுகிறது. என்று தீருமோ இந்த பெண்களுக்கு எதிரான தாக்குதல்கள்! அபலைகளின் கண்ணீர் துடைக்கப்படுமா?
குற்றவாளிகள் மீது ஜாதி, மத, பாகுபாடு இன்றி நடவடிக்கை தேவை.நிர்பயா, ஆசிபாவுக்கு பொங்கிய தமிழக ஊடகங்களும், பெண்கள் அமைப்புகளும், போராளிகள் சிறுபான்மை கல்விநிறுவனங்கள் என்றால் நவதுவாரங்களையும் பொத்தி கொண்டு எங்கே சென்று விட்டனர்? இந்த நிலை மாற வேண்டும். பெண்களுக்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்பதேநமது வேண்டுகோள்.

-டி.எஸ்.வெங்கடேஷ்