திரிக்கப்பட்ட கருத்து

சந்த் ரோஹிதாஸின் 647வது பிறந்தநாளை ஒட்டி பிப்ரவரி 6 அன்று மும்பையில், ரவீந்திர நாட்டிய மந்திர் வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத் கலந்து கொண்டு பேசுகையில், “நம்மை படைத்தவரை பொறுத்தவரை நாம் அனைவரும் சமம். ஜாதி, மதம் என்று எதுவும் கிடையாது. சில பண்டிதர்கள் (அறிஞர்கள்) சாஸ்திரங்களை மேற்கோள் காட்டி ஜாதி அடிப்படையிலான பாகுபாடு பற்றி பேசுகிறார்கள் என்றால், அது தவறானது.

சந்த் ரவிதாஸ், உண்மையை ஆராய வேண்டும் என்று நினைத்தார். நித்திய உண்மையை நோக்கிய வழி என்ன? அது உண்மையில் எப்படி இருந்தது? அவர் செவிவழிச் செய்திகளை நம்பவில்லை. அதை நேரடியாக அனுபவிக்க நினைத்தார். சுவாமி ராமானந்த் ஜியின் துணையுடன் அவர் அதனை சாதித்தார். உண்மை ஈஸ்வரனைத் தவிர வேறில்லை என்பதை உணர்ந்தான். அந்த உண்மை எல்லா உயிர்களிடத்தும் இருக்கிறது, அதனால் என்ன பெயர் இருந்தாலும், குணம் ஒன்றுதான், மரியாதை ஒன்றுதான், எல்லாரிடமும் பாசம் இருந்தது. யாரும் உயர்ந்தவராகவோ தாழ்ந்தவராகவோ இருக்கவில்லை. பண்டிதர்கள் குறிப்பிடும் வேதங்களின் அடிப்படை பொய். ஜாதி, பரம்பரை என்ற கருத்துச் சுழலில் நாம் குழம்பி நிற்கிறோம். இந்தக் குழப்பம் களையப்பட வேண்டும். நமது அறிவும் பாரம்பரியமும் இதைக் குறிப்பிடவில்லை, இதை சமுதாயத்திற்கு விளக்க வேண்டும். சத்தியம், மதம் மற்றும் கர்மாவை ஒருபோதும் கைவிடக்கூடாது என்று இந்த பாரம்பரியம் விதிக்கிறது.

மதம் என்பது ஒருவரின் வயிற்றை நிரப்புவதற்கு மட்டுமல்ல. உங்கள் வேலையைச் செய்யுங்கள், உங்கள் மதத்தின்படி செய்யுங்கள். சமூகத்தை ஒன்றிணைத்து அதன் முன்னேற்றத்திற்காக பாடுபடுங்கள், அதுதான் மதம். இத்தகைய எண்ணங்கள் மற்றும் உயர்ந்த லட்சியங்களால் தான் பல பெரிய மனிதர்களையும் சந்த் ரோஹிதாஸின் சீடர்களாக மாற்றியது. இதையே சந்த் ரவிதாஸ் சிக்கந்தர் லோதியிடம் கூறினார். தான் ஹிந்து மதத்தை கைவிடமாட்டேன் என்றும் அவர் தெளிவுபடுத்தினார். வேதங்களின் நம்பிக்கை உன்னதமானது. அது, உன்னுடைய இஸ்லாத்தை விட மேலானது என்றார். இதனால், சிக்கந்தர் லோதி சந்த் ரவிதாசுக்கு கைவிலங்கு போட்டு சிறையில் அடைத்தார். ஆனால் என்ன நடந்தது? அவர் சகுண கிருஷ்ணரை தரிசனம் செய்தார். உங்கள் வாழ்க்கை ஆபத்தில் இருக்கும்போது கூட உங்கள் நம்பிக்கையை ஒருபோதும் கைவிடாத சமூகத்திற்கு சந்த் ரவிதாஸ் முன்மாதிரியாக திகழ்ந்தார்.” என கூறினார்.

ஆர்.எஸ்.எஸ் தலைவர் டாக்டர் மோகன் பாகவத்தின் வார்த்தைகளை சில ஊடகங்கள் தவறாக மொழிபெயர்த்து, ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் சித்தாந்தத்தைத் திரிப்பதில் மகிழ்ச்சி அடைந்தனர். அவரது வார்த்தைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட அர்த்தம் கொடுக்கப்பட்டது. உதாரணமாக, இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் மராத்தி நாளிதழான லோக்சத்தா, இத்தகைய தவறான தகவல்களைப் பரப்புவதில் முன்னணியில் இருந்தது. அதன் செய்தித் தலைப்பில், “ஜாதி வேறுபாடுகளை உருவாக்கியது பிராமணர்கள்” என்று கூறியது. ஹிந்து தமிழ் நாளிதழும், “ஜாதிகளை உண்மையில் இறைவன் உருவாக்கவில்லை. சாமியார்கள் தான் ஜாதிகளை, பிரிவினைகளை உருவாக்கினார்கள்” என கூறியது.