உண்மைச் சம்பவம் கோபுரம்

கொரோனா ஊரடங்கிற்குப் பிறகு சின்ன மகன் வீட்டிற்கு வந்திருக்கிறேன். பக்கத்தில் அழகான, பழமையான, பிரசித்தி பெற்ற சிவன் கோயில். இங்கே வந்து தங்கும் போதெல்லாம் தினமும் வந்து போவது வழக்கம்.கோபுர வாசலில் வழக்கமான பூக்காரி ஈஸ்வரியைப் போனமுறை வரும்பேதே காணவில்லை. இப்போது யாரிடம் பூ வாங்குவது என சற்று முற்றும் பார்த்தேன்.
‘‘அம்மா! பெரியம்மா, நல்லா இருக்கிறீங்களா’’?
குரல் கொடுத்தது ஈஸ்வரியே தான். ‘‘நான் நல்லா இருக்கேன். உன்னைத்தான் போன வருடம் வந்தபோதுகூட பார்க்க முடியல. நீ நல்ல இருக்கியா?’’
‘‘அம்மா! நடக்கக் கூடாதெல்லாம் நடந்துச்சுமா. என் போதாத காலம்; என் மாமியார் உடம்பு சரியில்லாத போது ஜெபம் பண்றேன்னு வந்தவங்க அப்படியே மொத்தக் குடும்பத்தையும் கர்த்தர் கட்சிக்கு மாத்திட்டாங்க. அவ்வளவுதான் என் வியாபாரம் சுத்தமாக போடுச்சு.’’
‘‘ஏன் வியாபாரம் செய்ய என்ன தடை?’’
‘‘கோயில் வாசல்ல பூ விக்கக் கூடாதாம். நாங்க பொட்டு, பூ வைக்கக் கூடாது; நகை நட்டு போடக்கூடாது; வெள்ளைப் புடவைதான் கட்டனுமாம். ஒரே நரக வாழ்க்கைதான்.
என் மாமியார் உயிருக்குப் போராடும்போது வந்து உருக்கமாக ஜெபிச்சாங்கதான்.
அப்போதைக்கு நல்ல மனசுக் காரங்கன்னு நினைச்சோம். மாமியார் அழைச்சதும் கூட்டத்திலே நின்னு சாட்சி சொல்ல வச்சாங்க. அப்படியே ஆட்டக் கடிச்சி, மாட்டக் கடிச்சி மனுசனைக் கடிச்ச புலி மாதிரி மொத்தக் குடும்பத்தையும் மதம் மாத்திட்டாங்க.
மாமியார், புருசன்னு நானும் பொறுத்துக்கிட்டு இருந்தேன். ஆனா பின்னாடிதான் தெரிஞ்சுது எங்க குடும்பத்த சர்ச்சிலே சேர்த்த அவங்களுக்கு வெளிநாட்டிலேர்ந்து நிறைய பணம் வந்து சேருமுன்னு.
த்தூ…. இரு ஒரு பிழைப்பா’ன்னு சண்டை சச்சரவு பண்ணி அந்தக் கூட்டத்துக்குத் தலைமுழுக வச்சிட்டேன்.
இப்பப் பாருங்க… மஞ்சள்பூசி, குங்குமம் வச்சு, தலை நிறைய பூ வச்சு, நகை நட்டு போட்டு மங்களகரமா இருக்கேன். பழையபடி கோயில் வாசல்ல பூ வியாபாரம் செய்றேன்.’’
ஈஸ்வரியின் மலர்ந்த முகம் கண்டு மகிழ்ந்தேன். ‘‘சபாஷ்.. உன்னை மாதிரி எல்லாரும் தாய் சமயத்துக்குத் திரும்பினால் நாடும் வீடும் பத்திரமா இருக்கும்’’ என வாழ்த்தி, கம்பீரமாக நிற்கும் கோயில் கோபுரத்தை அண்ணாந்து பார்த்து வணங்கினேன்.
– காஞ்சன மாலா