காலியாகும் மம்தாவின் கூடாரம்

சமிப காலமாக மேற்கு வங்க மாநிலத்தின் அரசியல் நிலவரம் கலவரமாக உள்ளது. கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது மாநிலத்தில் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் ஆதிக்கத்தில் மாநிலம் இருந்து வந்தது. கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மம்தாவின் திரிணமூல் காங்கிரஸ் ௩௭ இடங்களை கைப்பற்றி நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக உருவெடுத்தது.. ஆனால் பாஜக வெறும் இரண்டு இடங்களை மட்டுமே கைப்பற்றி இருந்தாலும் மாநிலத்தில் 18% வாக்குகளை பெற்றிருந்தது இதனால் உற்சாகமடைந்த பாஜக மேலும் கட்சியை பலப்படுத்தி மாநிலத்தில் முக்கிய அரசியல் சக்தியாக மாறவேண்டும் என்ற நோக்கில் வேலைகளை செய்து வந்தது.. இதன் விளைவாக சென்ற ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் அனைத்து தரப்பு அரசியல் விமர்சகர்கள் கணிப்புகளையும் மீறி பாஜக  18 இடங்களை கைப்பற்றி ஆளும் திரிணமூல் காங்கிரஸ்  கட்சிக்கு பலத்த சவால் விட்டது. மாநிலத்தில் ஒட்டுமொத்த வாக்குகளில் 4௦.2% வாக்குகளை கைப்பற்றியிருந்தது. இதனால் உற்சாகம் அடைந்த பாஜகவினர் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியில் அதிருப்தியுடன் இருந்த தலைவர்களை வளைத்து போடத் துவங்கியது. ஒரு காலகட்டத்தில் மம்தாவின் தளபதிகளாக வலம் வந்த முகுல்ராய், சுவேந்து அதிகாரி உள்ளிட்ட முக்கிய தலைவர்களை பாஜக தன் பக்கம் இழுத்தது.

முந்தய ஆளும் கம்யூனிஸ்டு கட்சியினரின் வாக்கு  வங்கியாக கருதப்பட்ட வங்காளதேச ஊடுருவல்காரர்களை இங்கே தங்கவைத்து அவர்களுக்கு ரேசன் கார்டு, வாக்களர் பட்டியலில் பெயர், ஆதார் அட்டை போன்றவற்றை சட்டவிரோதமாக ஏற்பாடு செய்து கொடுத்து அவர்களை தங்களது கட்சியின் வாக்கு வங்கியாக மாற்றி கொண்ட அதே பாணியை மம்தாவின் கட்சியும் சுவிகரித்துக் கொண்டது. விளைவு மாநிலத்தில் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம்கள் குறிப்பாக எல்லையோர மாவட்டங்களில் அதிக அளவில்  ஊடுருவி, அங்கெல்லாம் தங்களது எண்ணிக்கையை அதிகரித்துக் கொண்டு உள்ளூர் குடிமக்களை அடித்து விரட்டிவிட்டு அந்த நிலங்களை அபகரிக்கும் கொடுமையும் அரங்கேறி வருகிறது. மாநிலத்தை ஆட்சி செய்யும் மம்தா அரசோ தனது சுயநலத்துக்காக  மேற்கு வங்கம் அனைவருக்குமானது என்று பேசி அனைத்து பங்களாதேசிகளும் இங்கு வரலாம் என்று மாநிலத்தை பங்களாதேசிகளுக்காக திறந்து விட்டுள்ளது . தங்களது  வாக்கு வங்கியாக உள்ள இந்த ஊடுருவல் பங்களாதேசிகள் பாதிக்கபடுவார்கள், அதன் மூலம் இவ்வளவு நாளும் அனுபவித்து வந்த ஆட்சி அதிகாரம் பறிபோய்விடும் என்பதாலேயே மம்தா மத்திய அரசு கொன்டுவந்த சி ஏ ஏ சட்டத்தையும் குடியுரிமை பதிவேடு அமல் படுத்துவதையும் பலமாக எதிர்த்து வந்தார். இந்த சூழ்நிலையில் கொரோனா நோயின் பரவல்  நாட்டில் அதிகமாக இருந்ததால் சி ஏ ஏ அமல் தள்ளிப்போனது. தற்போது இன்னும் மூன்று மாதத்தில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள  நிலையில் பா ஜ க  சார்பில் மாநிலம் முழுவதும் ‘பரிவர்த்தன் யாத்திரை’ என்ற பெயரில் பாஜகவின் தேர்தல் பிரச்சார பரப்புரை ஆரம்பிக்கப்பட்டுள்ளது , இந்த யாத்திரையை பாஜகவின் அகில பாரத தலைவர் ஜெ. பி. நட்டாவும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவும் அதிரடியாக சுழன்று மாநிலம் முழுவதும் பிரச்சாரங்களை முடுக்கிவிட்டுள்ளனர் .

விளைவு மாநிலத்தில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பாஜகவின் பலம் அதிகரித்துள்ளது. முன்பு மாநிலத்தில் எங்குமே இல்லை என்று சொல்லப்பட்ட பாஜக தற்போது மாநிலத்தில் பா ஜ க  இல்லாத இடமே இல்லை என்று சொல்லும் அளவுக்கு மக்களின் அமோக ஆதரவை பெற்றுள்ளது. சமீபத்தில் எடுக்கப்பட்ட டைம்ஸ் நவ் – சி வோடேர்ஸ் தேர்தல்  கருத்துக்கணிப்புகள் ஆளும் திரிணமூல் காங்கிரஸ்  கட்சிக்கு பலத்த  எச்சரிக்கையை அளித்துள்ளது. எதிர்கட்சியான பாஜக 41.6% வாக்குகளை பெற்று 146 இடங்களை கைப்பற்றும் என்றும் திரிணமூல் காங்கிரஸ்  கட்சி 39.6%  வாக்குகளை பெற்று 136 இடங்களை கைபற்றும் என்றும் கணிப்புய் வெளியிட்டுள்ளது. இந்த கருத்து கணிப்பைத் தவிர உள்ளூர் சானல்களிலும் பல புதிய கருத்துக்கனிப்புகள் ஆளும் கட்சிக்கு பலத்த அடி காத்திருக்கிறது என்பதை வெளிகாட்டியுள்ளது. தொடர்ந்து பத்தாண்டுகளாக ஆட்சியில் உள்ளதாலும் ஆளும்கட்சியினரின் அதிகார அத்துமீரல்கள் தலைவிரித்தாடும் லஞ்சம், மக்கள் நலத்திட்டங்களில் பெறப்படும் கமிஷன்கள் என ஆளும்கட்சி மீது பொதுமக்கள் மத்தியில் மிகுந்த எதிர்ப்பை சந்தித்துள்ளது. இது போக மம்தாவின் சிறுபான்மை பாசம் பெரும்பான்மை மக்களிடம் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் ஆளும் கட்சியின் பல எம் எல் ஏக்கள் பாஜகவில் இணைந்து விட்டனர், இன்னமும் பலர் அதிருப்தியுடன் சமயம் பார்த்து காத்திருக்கிறார்கள் .அதன் உச்சகட்டமாக நாடாளுமன்ற ராஜ்யசபா எம்பியும் முன்னால் மத்திய ரயில்வே அமைச்சருமான  தினேஷ் திரிவேதி தனது எம் பி பதவியை ராஜினாமா செய்து விட்டார் இதற்கு முன்பு மாநிலத்தின் விளையாட்டுத்துறை அமைச்சர் ராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படி மம்தாவின் நீண்ட நாள் விசுவாசிகள் பலர் கட்சிக்கு டாட்டா காட்டிவருவது மம்தாவுக்கு அதர்ச்சியை அளித்துள்ளது, தொடர்ந்து மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை, குறிப்பாக எதிர்கட்சியான பாஜகவின் தொண்டர்கள் மீது ஆளும் கட்சியின் குண்டர்கள் நடத்தும் திட்டமிடப்பட்ட கொலைவெறி தாக்குதல்கள் ,கொரோனா தொற்றுப் பரவலை சரியான முறையில் கையாலாதது, மேலும் மாநிலத்தில் சிறுபான்மை மக்களின் வாக்குகளை பெற பெரும்பான்மை மக்களின் உணர்வுகளை காலில் போட்டு மிதிப்பது, தனது மமதையால் மத்திய அரசின் ஒவ்வொரு மக்கள் நல திட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு எதிர்ப்பது,  குறிப்பாக மத்திய அரசின் பிரதமரின் ஆயுள் காப்பிடு, மருத்துவ காப்பிடு, விவசாயிகளுக்கான கிசான் நிதியுதவி திட்டம் போன்ற சாமான்ய மக்கள் நல திட்டங்களை மேற்கு வங்கத்தில் அமுல்படுத்தாதது  போன்ற மக்கள் விரோத நடவடிக்கைகளால் மம்தாவின் ஆட்சியை முந்தய கம்யூனிஸ்ட்டுகளின் ஆட்சியை போன்று வீட்டுக்கு அனுப்ப  மக்கள் தயாராகிவிட்டார்கள் என்பதனைத்தான் பா ஜ க தலைவர்கள் பங்கேற்கும் பொதுக் கூட்டங்களில் கூடிவரும் மக்கள் கூட்டமே சாட்சியாக உள்ளது.