திருட்டு விளம்பரம் திமுக

இன்றைய நாளேடுகள் சிலவற்றில் “ஆதிக்க சக்திகளும் அடிமைகளும் காணும் தொலைநோக்கு தமிழ் நாடு பாரீர்!!!” என்ற தி மு க வின் தேர்தல் விளம்பரத்தை காண நேர்ந்தது. முழுக்க முழுக்க பொய்களை சொல்லி மக்களை ஏமாற்றும் தரம் தாழ்ந்த போலி விளம்பரமே அது. பல போலி விவரங்களை குறிப்பிட்டுள்ள அந்த விளம்பரத்தின் உண்மை தன்மை என்ன என்பதை ஆராய்வோம்.
1. தமிழ்நாடு நிலக்கரி நிலையத்தில் தமிழர்களுக்கு வேலையில்லை.
நெய்வேலி நிலக்கரி நிறுவனமானது தற்போது தன் கிளைகளை பெருக்கி பல மாநிலங்களில் விரிவடைந்து முத்திரை பதித்து வருகிற நிலையில், அந்தந்த மாநிலங்களில் வசிப்போருக்கு வேலை வாய்ப்புகளை வழங்கி வருகிறது. இந்நிலையில், தமிழகத்தை தலைமையிடமாக கொண்ட இந்த நிறுவனம் வளரக்கூடாது என்ற தீய எண்ணத்திலேயே உண்மைக்கு புறம்பான விளம்பரத்தை தி மு க செய்துள்ளது.
2.அண்ணா நூற்றாண்டு நூலகம் பசு நல்வாழ்வு மையமாகும்.
இப்படி ஓர் கற்பனை சித்திரத்தை தி மு க வடித்திருப்பதற்கு காரணம் ஏதோ ஜோசியரின் ஆலோசனையாக இருக்கும் என்றே எண்ணத்தோன்றுகிறது. ஸ்டாலின் அவர்களின் தந்தை கட்டிய நூலகத்தில் வாஸ்து கோளாறு உள்ளதாலேயே ஆட்சிக்கு வரமுடியவில்லை என்பதால் அங்கே ஒரு ‘கோ’சாலையை உருவாக்குவதாக எண்ணிக்கொள்ளுங்கள். ஆட்சிக்கு வந்து விடுவீர்கள் என அந்த ஜோசியர் கூறியிருப்பாரோ என்றே என்ன தோன்றுகிறது.
3. ஒரு லிட்டர் பெட்ரோல் 110 ருபாய் என்று சித்தரிப்பது, தி மு க ஆட்சிக்கு வந்தால், வாட் வரி மேலும் 18 ரூபாய் உயர்த்துவார்கள் என்பதையே குறிக்கிறது.
4. தமிழ் நாடு விற்பனைக்கு :
தொடர்ந்து பிரிவினைவாத இயக்கங்களுக்கு ஆதரவு கொடுத்து வரும் திமுக தான் தமிழகத்தை பிரிக்க நினைக்கிறது. பல்வேறு வளர்ச்சி திட்டங்களை சில சமூக ஆர்வலர்கள், இயக்கங்கள் என்ற போர்வையில் இயங்கும் அந்நிய கைக்கூலிகளுக்கு ஆதரவாக தமிழகத்தின் முன்னேற்றத்தை தி மு க தான் தடுக்க நினைக்கிறது.
5.எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் செங்கல் மட்டுமே உள்ளது.
60 வருடங்கள் ஆட்சியில் இருந்த காங்கிரஸால், 15 வருடங்கள் மத்தியில் ஆட்சியை பகிர்ந்து கொண்ட திமுகவால் கொண்டு வர முடியாத எய்ம்ஸ் கல்லாரிக்கு பாஜக அரசு அடிக்கல் நாட்டி துவங்கியுள்ள நிலையில், ஆயிரம் கோடிக்கும் அதிகமான முதலீட்டில் வரக்கூடிய திட்டத்தை இரண்டே வருடங்களில் கட்டி முடிக்க வேண்டும் என துரிதப்படுத்துவது, எய்ம்ஸ் கல்லூரி வருவதை தி மு க விரும்பவில்லை என்றே தெரிகிறது.
6.தமிழ் நாடு என்ற பெயர் எடுக்கப்பட்டு தக்க்ஷன் பிரதேஷ் உருவாக்கம் :
உதயநிதி ஸ்டாலினின் அடுத்த பட தலைப்போ?
7.குடிநீர் பிரச்சினை :
தி மு க ஆட்சிக்காலத்தில் தான் பெண்கள் பல கிலோமீட்டர்கள் நடந்ததை நினைவுபடுத்துகிறது இந்த காட்சி. ஆனால், தற்போது, தமிழகத்தில் 1,26,89,045 வீடுகள் உள்ள நிலையில் இது வரை 38,05,967 வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு உள்ளது. அனைவருக்கும் குடிநீர் திட்டத்தின் கீழ் இது நாள் வரை 16,29,896 இணைப்புகள் அளிக்கப்பட்டுள்ளன. ஆகவே, இனி குடிநீருக்கு பெண்கள் அலைய வேண்டியது இல்லை. ஆனால் தி மு க ஆட்சிக்கு வந்தால் இப்படி தான் இருக்கும் என்பதையே அடையாளப்படுத்துகிறது இந்த விளம்பரம்.
8.எல்.கே.ஜி மாணவர்களுக்கு நீட் தேர்வு :
தி மு க ஆட்சியில் தான் தனியார் பள்ளிகள் புற்றீசல் போல் பெருகின. அனுமதி கட்டணம் கொள்ளையடிக்கப்பட்டது. பணம் படைத்தவர்கள் மட்டுமே படிக்க முடியும் என்ற நிலையினை உருவாக்கி அரசு பள்ளிகளை அழித்தார்கள். ஒன்றாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை மதிப்பீடு மட்டுமே தேர்வு இல்லை என்பதே உண்மை. மேலும், எட்டாம் வகுப்பு வரை தாய் மொழியிலேயே பயிற்று மொழியாக இருக்க வேண்டும் என்பதையும் வலியுறுத்துகிறது பாஜக.
9.போய் குலத்தொழிலை பாரு எதுக்கு எதுக்கு படிக்க வர?
திறன்பயிற்சியை மறக்க வைத்து கல்வி வியாபாரிகளை உருவாக்கி பல பொறியியல் கல்லூரிகளை திறந்து பொறியியலை படிக்க வைத்து வேலைவாய்பின்மையை உருவாக்கியது தி மு க. ஆனால், வேலைக்கேற்ற திறன் பயிற்சி. அப்படி செய்து விட்டால் தி மு கவின் கல்வி வியாபாரிகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் என்பதால் இந்த அச்சுறுத்தல்.
10.ஸ்டெர்லைட் துப்பாக்கி சூடு.
ஸ்டெர்லைட்டுக்கு அனுமதி கொடுத்து, சுற்றுப்புற சூழல் அனுமதி கொடுத்து, நிலம் கொடுத்து ஆதரித்தது தி மு க. ஸ்டெர்லைட்டின் வேதாந்தா நிறுவனத்தின் முக்கிய இயக்குநராக இருந்தது ப. சிதம்பரம்.
11. தர்ம யுத்தம் 4.0
2009 ல் ஒன்றரை லட்சம் தமிழர்களை ஒழித்து விட்டு ஒன்றரை மணி நேரம் உண்ணாவிரத நாடகத்தை நடத்திய கருணாநிதியின் தர்மயுத்தத்தை விட வேறு ஏதும் பெரிதுண்டோ?
12.எட்டு வழி சாலை.
தமிழக நெடுஞ்சாலைகளில் அதிக தூரத்தை அமைத்தது தாங்கள் தான் என மார்தட்டி கொள்கிறது தி மு க. மரங்களை, வயல்களை அதிகமாக காணாமல் செய்தது தி மு க தான். எட்டு வழி சாலை ஏற்றம் தரும். வேலை வாய்ப்புகள் பெருகும்.
ஆகவே உண்மைக்கு புறம்பாக, மோசடி விளம்பரத்தை செய்துள்ளது தி மு க. இது ஊடகங்களின் ஒப்புதல் இல்லையென்றாலும், ஊடகங்கள், இந்த அறிவிப்புகள் அனைத்தும் பொய், மோசடி வார்த்தைகள் என்பதை ஒப்பு கொள்ள வேண்டும்.
தி மு க தான் ஆதிக்க சக்தி என்பதும் மக்களை அடிமைகளாக எண்ணி மோசடி விளம்பரத்தை செய்துள்ளது என்பதும் கண்கூடு.
நாராயணன் திருப்பதி,