மதமாற்ற விழிப்புணர்வு யாத்திரை

ஆந்திராவில், விசாகப்பட்டினத்தில் உள்ள சாரதா பீடம் சார்பில், ஆந்திரா, தெலங்கானாவில் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களிடம், ‘வேற்று மதத்தவரின் மதமாற்ற பிரச்சாரங்களை நம்பி மதம் மாற வேண்டாம், ஏமாற வேண்டாம் என விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. பழங்குடியினர், பட்டியலினத்தவர் அதிகம் வசிக்கும் பகுதிகளில் கவனம் செலுத்தப்பட்டது. 2019ல் தொடங்கப்பட்ட இந்த ஹிந்து தர்மபிரச்சார யாத்திரை சுமார் 33 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவுக்கு நடைபெற்றது. இளம் பீடாதிபதி சுவாமி ஸ்வத்மனந்தேந்திரா தலைமையில் 1,200 பேர் 25 பேருந்துகளில் பயணம் செய்து பிரச்சாரத்தை மேற்கொண்டனர். இந்த யாத்திரை திருப்பதி ஏழுமலையான் தரிசனத்துடன் நிறைவடைந்தது. ‘ஹிந்து மதத்தினரை வேற்று மதங்களுக்கு மாற்றுவதை தடுக்கவே இந்த யாத்திரையை நடத்தினோம். இது போன்ற யாத்திரைகள் மேலும் தொடரும்’ என சுவாமி ஸ்வத்மனந்தேந்திரா திருமலையில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.