மதுராவில் மது கிடையாது

உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மபூமி கோயிலின் புனித்த் தன்மையை பாதுகாக்கவும் அங்கு நல்ல தெய்வீக சூழலை ஏற்படுத்தவும் அம்மாநில அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முன்னதாக, கடந்த 2021ல் கிருஷ்ண ஜெயந்தியின்போது மதுராவில் வழிபாடு செய்த முதல்வர் யோகி ஆதித்யநாத், மதுரா நகராட்சியின் 22 வார்டுகளை உள்ளடக்கிய பகுதி இனி புனித யாத்திரை தலமாக அடையாளம் காணப்படும். அங்கு இறைச்சி மற்றும் மது விற்பனைக்கு முழு தடை விதிக்கப்படும் என்று கூறியிருந்தார். அதன்படி, மதுரா கோயிலை சுற்றியுள்ள பகுதிகளில் மது மற்றும் போதை போருட்கள் விற்பனை செய்த 37 கடைகளை யோகி ஆதித்யநாத் தலைமையிலான அரசு கடந்த ஜூன் 1ம் தேதி முதல் மூடியது. மதுராவில் உள்ள கிருஷ்ண ஜன்ம பூமியை சுற்றி 10 கி.மீ சுற்றளவில் இயங்கி வரும் பல மதுபானக் கடை உரிமையாளர்களின் உரிமங்கள் ரத்து செய்யப்பட்டன. ஹோட்டல்களில் உள்ள பார்களும் மூடப்பட்டன. மேலும், அதிக அளவு பால் பால் உற்பத்திக்கு பெயர் பெற்ற மதுராவில் பால் வணிகத்தை மீண்டும் உயிர்ப்பிக்க உதவும் வகையில், இந்த வணிகர்கள் பால், உற்பத்தி, விற்பனை போன்றவற்றில் ஈடுபடுமாறு மாநில அரசு அறிவுறுத்தியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக, அயோத்தியில் உள்ள ஸ்ரீராமர் கோயில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் இதே போன்ற கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.