ஷாகித் அப்ரிதி போற்றும் தலிபான்கள்

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஷாஹித் அப்ரிதி, பாகிஸ்தானில் ஒரு ஊடக உரையாடலின் போது, ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியை வரவேற்றார். மேலும், ‘தலிபான்கள் நேர்மறையான மனதுடன் வந்துள்ளனர். அவர்கள் பெண்களை வேலை செய்ய அனுமதிக்கிறார்கள், தலிபான்கள் கிரிக்கெட்டை விரும்புவார்கள் என்று நான் நம்புகிறேன்’ என்று கூறினார். பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானும், தலிபான்கள் ‘சாதாரண பொதுமக்கள்’ என்று அவர்களுக்கு நற்சான்றிதழ் அளித்தார். ஆனால், தலிபான்கள் கடுமையான முஸ்லிம் ஷரியா சட்டத்தைப் பின்பற்றுபவர்கள். அங்கு கிரிக்கெட் உட்பட அனைத்துவிதமான பொழுதுபோக்குகளும் ‘ஹராம்’ ஆகும். தலிபான்கள் ஆப்கனைக் கைப்பற்றைய சில நாட்களிலேயே காபூல் விமான நிலையத்திற்கு வெளியே வெடிகுண்டு தாக்குதல்கள், நாட்டுப்புற பாடகர் ஃபவாத் அந்தராபியை கொன்றது, பிரபல நகைச்சுவை நடிகர் நாசர் முகமதுவை தூக்கிலிட்டுக் கொன்றது, ஆப்கனில் பெண்கள் தங்கள் வீரர்களிடமிருந்தே பாதுகாப்பாக இல்லை என்பதை தலிபான்களே ஒப்புக்கொண்டது, பெண்களை வீட்டிலேயே இருக்கும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது, பர்தா அணியாததற்காக பெண் கொல்லப்பட்டது, 12 வயதிற்கு மேற்பட்ட சிறுமிகள், பெண்களை கடத்தி செல்வது, பத்திரிகையாளர்கள் கொலை, வெளியேற மிரட்டல் என நீளும் பட்டியல் அவர்களின் உண்மை முகத்தை வெளிக்காட்டுவதாகவே உள்ளது.